நயன்தாரா அடுத்து படத்திக்கு டப்பிங் இவர் தான் முடிவு செய்வார்.!பிரபல செய்த ட்வீட்.!

0
449
Nayanthara

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளவர் நடிகை நயன்தாரா. இவரது படங்கள் அனைத்துமே தயாரிப்பாளர்களுக்கு நல்ல வசூலை ஈட்டி தந்து விடுகிறது. அதனாலேயே இவரை வைத்து படம் எடுக்க பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆரம்ப காலகட்டத்தில் நடிகை நயன்தாரா படங்களில் டப்பிங் பேசவில்லை. அவருக்கு பதிலாக வேறு சில டப்பிங் கலைஞர்கள் தான் பேசி வந்தனர். ஆனால், லேடி சூப்பர் ஸ்டார் ஆக வந்த பின்னர் ஒரு சில படங்களுக்கு நடிகை நயன்தாராவே டப்பிங் செய்திருந்தார். இந்த நிலையில் நடிகை நயன்தாராவின் அடுத்த படத்திற்கு யார் டப்பிங் செய்ய வேண்டும் என்பதை நடிகர் ராதாரவி தான் முடிவு செய்வார் என்று சின்மயி சர்ச்சையான கருத்தை பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

கடந்த செய்த வாரத்திற்கு முன்னர் நடிகர் ராதாரவி ஒரு படத்தின் விழா ஒன்றில் நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சையான விஷயங்களை பேசி இருந்தார். இது திரைப்படத்துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இருப்பினும் ராதாரவி, தான் பேசியது குறித்து எந்த ஒரு தவறும் இல்லை என்று கூறி இருந்தார். இருப்பினும் தனது கருத்திற்கு வருத்தத்தை மட்டும் தெரிவித்திருந்தார்.

ஆனால், வைரமுத்து குறித்து தவறான விஷயங்களை பேசி வருகிறார் என்று பாடகி சின்மயி டப்பிங் யூனியனிலிருந்து நீக்கினார் ராதாரவி. இந்த நிலையில் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ராதாரவி குறித்து பதிவிட்டுள்ள சின்மயி , நயன்தாரா குறித்து பேசிய ராதாரவி இன்னும் டப்பிங் யூனியனில் தான் இருக்கிறார் . ஆனால் அவர் , நயன்தாராவின் அடுத்த படத்திற்கு யார் டப்பிங் பேசுவார் என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement