Metoo குறித்து ரஹ்மான் என்ன சொன்னார், சமந்தாவின் வாழ்க்கை – பல கேள்விகளுக்கு பதில் அளித்த சின்மயி.

0
434
Chinamyi
- Advertisement -

பிரபல பாடகி சின்மயி ஒரு தனியார் யூடியூப் நிறுவனம் எடுத்த இன்டர்வியூர் கலந்து கொண்டவர் தன் வாழ்க்கையை குறித்து, சமந்தாவை பற்றியும், பெண்களுக்கு ஆன சமுதாய பிரச்சனைகள் குறித்தும், விளக்கமாக பேசினார். தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் சின்மயி . இவர் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதனை தொடர்ந்து இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே ஒரு பணிப்போரே ஏற்பட்டது. அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது. இதனைத்தொடர்ந்து வைரமுத்து யாருடைய படங்களில் ஒப்பந்தம் ஆனாலும் ஏன் இந்த மாதிரி? ஆளுக்கெல்லாம் வாய்ப்பு தருகிறீர்கள்? இவரை எல்லாம் படத்தில் வைக்காதீர்கள்? என்று சின்மையி விமர்சித்து டீவ்ட் போட்டு வருகிறார்.

- Advertisement -

தெய்வம் தந்த பூவே பாடல் பற்றி :-

தெய்வம் தந்த பூவே பாட்டு நான் பாடும்போது எனக்கு 15 வயதாக இருந்தது. அந்தப் பாடல் அவ்வளவு ஹிட் ஆகும் என்று எனக்கு அப்ப எதுவும் தெரியாது சொல்லப்போனால் மணிரத்தினம் யார் என்று தெரியாது, ரகுமான் சார் தெரியாது, ஏன் இவர்கள் புகைப்படங்கள் கூட நான் பார்த்தது கிடையாது, அந்த பாடல் வரிகள் எழுதிய கவிஞர் யார் என்று எனக்கு தெரியாது இப்படித்தான் அந்த பாட்டு நான் பாடினேன். அனைவரும் சொல்வார்கள் தெய்வம் தந்த பூவே பாட்டு பாடிய பன் இவர்கள்தான் ஆகோ ஓஹோ என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால் அந்த பாட்டு பாடிய பின் எனக்கு இரண்டு வருடங்கள் வாய்ப்பு இல்லாமல் இருந்தேன் அது யாருக்கும் தெரியாது என்று தெரிவித்தார்.

சமூகத்தில் பெண்களா முடிவு எடுக்கும் உரிமை இல்லை :-

எனக்கு மேலும் பல விஷயங்களை உறுதுணையாகவும் உதவியாக இருந்தது என் கணவர் தான். எனக்கு அவர்தான் தைரியம் கொடுத்தார் தைரியம் என்றால் அவர் இந்த வைத்துக்கொள் என்று தைரியத்தை தூக்கி கொடுக்கவில்லை என்னிடமிருந்து தைரியத்தை அவர் வெளிக் கொண்டு வந்தார் மேலும் ஒரு பெண் சொந்தமாக ஒரு முடிவு எடுக்க முடியாது அவள் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றால் யார் என்றே தெரியாத கணவர் மாமியார் மாமனார் இவர்களெல்லாம் சரி என்று சொன்னால்தான் முடிவு எடுக்க வேண்டுமா இதையெல்லாம் ஒரு 18, 19 வயதில் இருக்கும் காலமத்தில் சொல்லி வளர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். யார் என்றே தெரியாமல் அவர்கள் எடுக்கும் முடிவு தான் நாம் முடிவு என்று ஒரு கேவலமான கலாச்சாரம் இந்தியாவில் தான் இருக்கிறது என்று சின்மயி கூறினார்.

-விளம்பரம்-

ஓரு பெண் உறவில் இருப்பதற்கு இதையல்லாம் இழக்க வேண்டும் :-

மேலும் வீட்டில் கணவரை விட ஒரு பெண் அதிகமாக சம்பாதிக்கிறார், பிரபலமாக உள்ளார், வாழ்க்கையில் முன்னேறி விட்டார் இது போன்ற காரணங்களால் குடும்பத்தில் உள்ளவர்கள் வயிற்றெரிச்சல் படுவதால் பெரும்பான்மையான பெண்கள் வீட்டில் மன நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை நான் நிறைய அறிந்து இருக்கிறேன். வீட்டில் மனஅமைதி, சாந்தி இருப்பதற்காக ஒரு பெண் தன்னுடைய வாழ்க்கை, லட்சியம், கனவு இதெல்லாம் தொலைத்துவிட்டு ஒரு உறவில் இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்தையும் சகித்துக் கொண்டு கஷ்டப்பட்டு ஒரு பெண் இருப்பது வந்து எந்த விதத்தில் நியாயம். என்றும் பெண்களை குறித்து கருத்தையும் சின்மயி கூறினார்.மேலும் எனக்கு 96 படம் என்பது மிகவும் பிடித்த படம்.

சமந்தாவை இன்ஸ்பிரேஷன் :-

அதுவும் 96 தெலுங்கு வெர்சன் சமந்தாவிற்கு வாய்ஸ் கொடுத்தது எனக்கு இன்னும் மகிழ்ச்சி அடைய வைக்கிறது. ஒரு பெண் வாழ்க்கையில் எப்படி வர வேண்டும் என்பதற்கு சமந்தாவை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொள்ளலாம் எனக்கும் சமந்தா ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கிறார். சமந்தா வாழ்வில் கடந்து வந்த பாதை அவருடைய தன்னம்பிக்கை தைரியம் ஒவ்வொரு பெண்ணிடமும் அது இருக்க வேண்டும். அடுத்ததாக ஹாலிவுட் ரூசோ பிரதர்ஸ் உடன் சமந்தா செய்யும் வேலை செய்ய உள்ளார். வாழ்வில் அடுத்த கட்ட வெற்றியை தொட்டு விட வேண்டும் என நான் விரும்புகிறேன். நானும் என் கணவரும் சமந்தா விடம் அடிக்கடி சொல்லும் நீங்கள் எங்கேயோ செல்லப் போகிறீர்கள் என்று அவர் உனக்கும் உன் புருஷனுக்கும் இதுதான் வேலை நான் அதை பண்ணிடுவேன் இதை பண்ணிடுவேன் கூறுவீர்கள் என சமந்தா சொல்வராம் என சின்மயி நம்மிடைய கூறினார்.

Advertisement