அவரு வைரமுத்துக்கு நிகரான போட்டோயில இருப்பவர். பாடகர் கார்த்தி குறித்து சின்மயி பதிவு.

0
48960
chinmayi

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியான சின்மயி, தேசிய விருது பெட்ரா கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்து இருந்தது பலரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன், நடிகை ஒருவர் தொடர்ந்த பாலியல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து நெட்டிசன் ஒருவர் சமூகவலைதளப்பாக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த டீவீட்டிற்கு வைரமுத்து மற்றும் பாடகர் கார்த்தியை உதாரணமாக காண்பித்து சின்மயி ட்வீட் போட்டுள்ளார்.  

- Advertisement -

பாடகி சின்மயி வைரமுத்து மட்டுமல்லாமல் பல்வேறு நபர்கள் குறித்தும் சின்மயி குற்றம் சாட்டி இருந்தார். அதில் பாடகர் கார்த்திக்கும் ஒருவர். அவர் பல பெண்களிடம் தவறான மெசேஜ் அனுப்புவது, தவறாக தொடுவது என மோசமாக நடந்துகொள்வார் என வெளிநாட்டு தமிழ் பாடகி கூறிய புகாரை சின்மயி வெளியிட்டார். இதுகுறித்துகார்த்தி விளமளிகையில் “எனக்கு தெரிந்து நான் யாரையும் அப்படி செய்யவில்லை. அப்படி இருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன் – சட்ட ரீதியாக நடவடிக்கையை எதிர்கொள்ளவும் தயார்” என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி சின்மயி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினாலும், இது தொடர்பாக ஒரு தீர்வும் வரவில்லை. இருப்பினும் சமீபத்தில் பாடலாசிரியர் வைரமுத்து, மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு ட்விட்டரில் தனது சந்தோசத்தை வெளிப்படுத்தி இருந்தார் சின்மயி. இந்த நிலையில் தற்போது சின்மயி மீண்டும் பாடகர் கார்த்தி குறித்து சர்ச்சையான ட்வீட் ஒன்றை போட்டுள்ளது பெரும் பரப்ரபை ஏற்படுத்தியுள்ளது.

அதில், இது என்ன பிரமாதம், பாடலாசிரியர் வைரமுத்து மீது 13க்கும் மேற்பட்ட பெண்களும், பாலிவுட் இசையமைப்பாளர் அனு மாலிக் மீது 6-க்கும் மேற்பட்ட பெண்களும் பாலியல் குற்றம் சுமத்தியுள்ளனர் என்று தெரிவித்தார். இதுமட்டுமின்றி, பாடகர் கார்த்தி, கைலாஷ் கெர், ரகு தீக்ஷித் ஆகிய பிரபலங்களையும் விளாசிய அவர், மகளிர் தினத்தை கொண்டாடுவது மட்டும் முக்கியமல்ல பெண்களை மதிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார். மகளீர் தினத்தன்று சின்மயி இப்படி ஒரு ட்வீட் போட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement