பொய் என்று தெரியாமல் பூனம் பாண்டே மரணத்திற்கு முட்டு கொடுத்த சின்மயி – பூனம் பாண்டே வீடியோவை பகிர்ந்து போட்ட பதிவு.

0
681
- Advertisement -

சமூக வளைத்தளத்தில் ஆபாச விடியோக்கள் புகைப்படங்கள் என்று பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை பூனம் பாண்டே. இதுவரை இந்தியில் மூன்று படங்கள் மட்டுமே நடித்திருந்தலும் இணையத்தளத்தில் அம்மணி படு பேமஸ். இறுதியாக இந்தியில் ஜர்னி ஆப் கர்மா என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத அடிக்கடி தன்னுடைய காதலுடன் மோசமாக பதவியை வெளியிட்டுவந்தார். 2011-ஆம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று இவர் கூறி இருந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

அதே போல தன்னுடைய காதலுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை சமூக வளையதளத்தில் வெளியிட்டு வைரலானது.மேலும், இவர் ஆபாச புகைப்படங்களை தனது பூனம் பாண்டே ஆப் மூலம் விற்றும் வந்தார். இப்படி ஒரு நிலையில் பூனம் பாண்டே பூனம் பாண்டேவிற்கு cervical cancer எனப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்பட்டு இறந்துவிட்டதாக அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்தது.

- Advertisement -

பூனம் பாண்டேவின் இறப்பு செய்தி வெளியானதும் பலர் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில் ஒரு சிலரோ, பூனம் பாண்டேவுக்கு இந்த புற்று நோய் உடலுறவால் தான் ஏற்பட்டு இருக்கும் என்று கூறி வந்தனர். இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து வீடியோ வெளியிட்ட சின்மயி ‘ கர்பப்பை புற்றுநோய் என்பது உடல் உறவால் மட்டும் வரக்கூடிய ஒரு நோய் அல்ல என்பது கூட தெரியாது முட்டாள்கள் இருக்கிறார்கள்.

ஒரு பெண்ணிற்கு நோய் வந்துவிட்டாலே அவரது குணத்தை விமர்சித்து பேசுவது தான் இந்த சமூகத்தின் வழக்கமாக இருக்கிறது. கர்பப்பை புற்றுநோய்யால் பாதிக்கப்பட்ட நபர்களின் வலி அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் என்று பூனம் பாண்டேவின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்தார். ஆனால், பூனம் பாண்டே இறக்கவில்லை என்றும் தான் உயிரோடு தான் இருக்கிறேன் என்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

-விளம்பரம்-

அதில் ‘கர்ப்பப்பை புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இது போன்ற ஒரு செய்தி பரவ விடப்பட்டது. கர்ப்பபை புற்று நோய் காரணமாக ஆயிரக்கணக்கான பெண்கள் உயிரிழக்கின்றனர். இதற்கு என்ன செய்யவேண்டும் என்று அவர்களுக்கு தெரியவில்லை. இந்நோயை தடுக்க முடியும். அதனால் இந்த நோய் தொடர்பான மருத்துவ பரிசோதனைகளைச் செய்து கொள்ளுங்கள்.” என்று அதில் பேசியுள்ளார்.

இந்த வீடியோ தொடர்ந்து பலரும் பூனம் பாண்டேவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பூனம் பாண்டேவின் இந்த வீடியோவை தொடர்ந்து, கண்டுபான சின்மயி இந்த வீடியோவை பகிர்ந்து தலையில் அடித்துக்கொண்டு இருப்பது போல எமோஜிக்களை பதிவிட்டு இருக்கிறார். மேலும், பொய்யான மரணம் மூலம் கர்பப்பை புற்று நோய் விழிப்புணர்வு மிகவும் மோசமான ஒரு செயல். என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் புற்றுநோயால் தான் இறந்தார் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement