இந்த கட்சியோடு விஜய் நிச்சயம் கூட்டணி அமைக்க மாட்டார் – விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து பேரரசு.

0
449
- Advertisement -

விஜயின் அரசியல் குறித்து இயக்குனர் பேரரசு அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக சோசியல் மீடியாவில் விஜயின் அரசியல் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டார்கள். இவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் விஜய் அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார். விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும் தங்களின் ஜனநாயக கடமையை செய்து வருகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார்கள். அதனின் முக்கிய படியாக தான் கட்சி தொண்டர்களாக மாற்றி இருக்கிறார் என்றும் கட்சி வேலைகளும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் விஜய் செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் விஜய் அவர்கள் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருந்தார்.

- Advertisement -

விஜய் அரசியல்:

இதன் மூலம் விஜய் அரசியல் வருவதற்கு அடுத்த கட்டமாக தான் இதையெல்லாம் செய்கிறார் என்று பலரும் கூறுகின்றனர். அதோடு விஜய் விரைவிலேயே அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் தன்னுடைய கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த பெயரை விஜய் அறிவித்ததில் இருந்து விஜயின் மன்ற உறுப்பினர்கள், ரசிகர்கள் என பலருமே உற்சாகத்தில் இருக்கிறார்கள். இதனை அடுத்து விஜய் தன்னுடைய கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.

விஜய் கட்சி குறித்த தகவல்:

அதோடு 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை. 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகுவோம் என்று விஜய் சொல்லியிருக்கிறார். இப்படி முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட இருப்பதால் சினிமாவிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகிறது. தற்போது விஜய் அரசியலுக்கு வருவது உறுதியானதை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் இயக்குனர் பேரரசு அவர்கள் விஜயின் அரசியல் குறித்து கூறியது, நான் பாஜகவை சேர்ந்தவன்.

-விளம்பரம்-

இயக்குனர் பேரரசு பேட்டி:

இருந்தாலும், விஜய் அரசியலுக்கு வருவதை ஆதரிக்கிறேன். அவருடைய கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று அற்புதமான பெயரை வைத்திருக்கிறார். திராவிடம் என்று வைத்தால் தான் தவறு. கழகம் என்று வைத்ததில் எந்த தவறும் இல்லை. 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில் விஜய் அரசியல் களம் காணலாம். ஆனால், 2031 ல் தான் வெற்றி பெற முடியும். அதுவும் ஏதாவது ஒரு கட்சியுடன் கண்டிப்பாக கூட்டணி அமைத்தால் தான் வெற்றி பெற முடியும். தனியாக போட்டியிடுவது அது கடினமான ஒன்று. விஜய் திமுக மற்றும் அதிமுகவில் கண்டிப்பாக கூட்டணி அமைக்க மாட்டார்.

விஜய் அரசியல் குறித்து சொன்னது:

பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளில் தான் விஜய் கூட்டணி அமைப்பார். விஜயகாந்த் வழியில் விஜய் பயணிக்கவில்லை. விஜயகாந்த் எம்ஜிஆர் வழியில் தான் பயணித்தார். எம்ஜிஆர் வழியில் தான் இருவருமே பயணிக்கின்றனர். விஜயகாந்த் வேறு, விஜய் வேறு. விஜயகாந்த் அவர்கள் உரிமையாக வாடா போடா என்று என பேசுவார். அதேபோல் தவறு செய்தால் உடனடியாக களத்தில் இறங்கி தட்டி கேட்பார். ஆனால், விஜய் அப்படி கிடையாது. ரொம்ப அமைதியானவர், சிறிது பொறுமையானவர். அதற்காக அரசியலில் தகுதி இல்லை என்று சொல்ல முடியாது. பொறுமையாக இருந்தாலும் வல்லவர். அரசியலில் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது, வல்லவனாகவும் இருக்க வேண்டும். 2031 ஆம் ஆண்டு தான் அவரால் ஜெயிக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement