இறப்பதற்கு முன் பாவதாரணியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய இளையராஜா – என்ன தெரியுமா?

0
235
- Advertisement -

மறைந்த பாடகி பவதாரணியின் கடைசி ஆசையை இளையராஜா நிறைவேற்றி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி அவர்கள் மைடியர் குட்டி சாத்தான் என்ற படத்தின் மூலம் பாடகியாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதன் பின்இவர் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். இவர் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்கு தேசிய விருது கூட வாங்கி இருந்தார்.

-விளம்பரம்-

பெரும்பாலும் இவர் தன்னுடைய தந்தை, சகோதரர்கள் இசையில் தான் பாடி இருக்கிறார். இதனிடையே இவர் சபரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இப்படி ஒரு நிலையில் பவதாரணிக்கு புற்றுநோய் இருந்திருக்கிறது. இதற்காக இவர் சமீப காலமாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். கிட்டத்தட்ட கடந்த ஐந்து மாதங்களாக அவர் இலங்கையில் சிகிச்சை மேற்கொண்டு வந்து இருக்கிறார். அதேபோல் இளையராஜாவும் இலங்கையில்தான் இருந்திருக்கிறார்.

- Advertisement -

பவதாரணி இறப்பு:

இந்த நிலையில் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி மூச்சு திணறல் ஏற்பட்டு பவதாரணி உயிரிழந்திருக்கிறார். தற்போது அவருக்கு வயது 47. இவருடைய இறப்பு கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இளையராஜா குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்து இருக்கிறர்கள். பின் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி அஞ்சலிக்காக பவதாரணி உடல் வைக்கப்பட்டிருந்தது.

பவதாரணிக்கு இறுதி அஞ்சலி:

அங்கு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பிரபலங்கள் என பலருமே தங்களுடைய இரங்களை தெரிவித்து வந்தார்கள். இதை அடுத்து குடும்ப சம்பிரதாய படி சடங்குகள் எல்லாம் செய்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழக்கப்பட்டது. மேலும், பவதாரணி குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பவதாரணியின் கடைசி ஆசை குறித்த தகவல்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

பவதாரணி கடைசி ஆசை:

அதாவது, பவதாரணி இலங்கையில் சிகிச்சைக்காக சென்றிருந்தபோது அவருக்கு உதவிய ஊடக தளம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர் பல விஷயங்களை பகிர்ந்தும் இருக்கிறார். பின் இலங்கையில் இளையராஜா கடந்த மாத இறுதியில் நிகழ்ச்சி நடத்த இருந்தார். அப்போது பவதாரணி தன்னுடைய தந்தை இளையராஜாவை பார்க்க வேண்டும் என்று அடம்பிடித்து இருக்கிறார். இதனால் இளையராஜா பவதாரணி தங்கி இருந்த அறைக்கு பக்கத்து அறையிலேயே தங்கி இருந்தார்.

பவதாரணி செய்த செயல்:

தன்னுடைய மகள் இறப்பதற்கு முந்தைய நாள் இளையராஜா இரண்டு மணி நேரம் அவருடன் செலவிட்டும் இருக்கிறார். அதற்கு பிறகு தான் பவதாரணி இறந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தான் இறக்கப் போவதை முன்கூட்டியே அறிந்து கொண்ட பவதாரணி இலங்கைக்கு செல்வதற்கு முன்பே தன்னுடைய தந்தை இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, கங்கை அமரன், பிரேம்ஜி, வெங்கட் பிரபு என உறவினர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு பிடித்த பொருட்கள் எல்லாம் வாங்கி கொடுத்து அவர்களுடன் நேரமும் செலவிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisement