சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் பாடகி சின்மயியும் ஒருவர். மேலும், சமூக வலைத்தளங்களின் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் பின்னணி பாடகி சின்மயி. தமிழ் சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் இவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தார்கள் என்று இவர் கூறி உள்ளார். இதனால் தமிழ் திரை உலகமே அதிர்ந்து போனது என்று சொல்லலாம். சின்மயி அவர்கள் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர்.
பின்னர் இவர் பல படங்களில் பாடி உள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் உள்ளார். இதை தொடர்ந்து இவர் படங்களில் பின்னணி குரல் தருபவராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் சில ஆண்டுகளாகவே சின்மயி குறித்து சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகள் எழுந்தன. இது அனைவருக்கும் தெரிந்ததே. அதுமட்டும் இல்லாமல் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக “me too” என்ற ஹஸ்டேக் ஒன்றையும் உருவாக்கினார். இதன் மூலம் பல பெண்கள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை இந்த ஹஸ்டேக்கில் பதிவிட்டு வந்தனர்.
தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்தது சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தேவதாசி முறையைப் பற்றி சின்மயி அம்மா தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பாடகி சின்மயி அவர்களும் மன்னிப்பு கேட்டு உள்ளார். பாடகி சின்மயின் இந்த நடவடிக்கைகளுக்கு பல பேர் ஆதரவு தெரிவித்தும், சில பேர் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் சின்மயி தாயார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவர் தேவதாசி முறையை குறித்து பேசினார்.
அதில் அவர் கூறியது, ‘தேவதாசி முறை என்பது இந்த பாரத தேசத்துக்கு சொந்தமானது. அது மிகச் சிறந்த சிஸ்டம் ஆகும். அதை இல்லாமல் இருக்கும்படி செய்தால் நான் பெரியாரை மன்னிக்க மாட்டேன்’ என்று கூறினார். மேலும், சின்மயி தாயார் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்து பலரும் இதை சின்மயி விஷயங்களில் செய்யுங்கள் என்று தாறுமாறாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதை பார்த்த சின்மயி அவர்கள் ட்விட்டரில் இது குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.
அது, என் தாயாருக்கு பதில் நான் மன்னிப்பு கேட்கிறேன். தேவதாசி முறையை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன். என்னுடைய அம்மா கூறி அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். எனக்கு தேவதாசி முறையில் எந்த உடன் பாடு இல்லை. என் அம்மாவுடைய கருத்துக்காக என்ன சொல்றது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அதுவும் இது நியாயம் இல்லாத ஒன்று. அவரது செயலுக்கு என் அம்மா தான் பொறுப்பே தவிர நான் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. இருந்தாலும் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறி உள்ளார்.