‘உங்க ட்ரெஸ் தான் காரணம்’ – ஜீ தமிழ் சீரியலில் Boomer ஆண்டி போல பேசிய ஹீரோயின். கடுப்பாகி சின்மயி போட்ட பதிவு.

0
700
- Advertisement -

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இதனால் ஒவ்வொரு சேனலும் தன்னுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சீரியல்கள் ஹிட் ஆகுவதற்கு முக்கிய காரணமாக அவ்வப்போது சீரியல் ஏற்படும் டீவ்ஸ்ட் தான். அந்த வகையில் ஜீ தமிழ் சேனலில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பேரன்பு. இந்த சீரியல் 2021 டிசம்பர் 13 ஆம் தேதியில் இருந்து ஜீ தமிழ் சேனலில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

மேலும், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ஹீரோவுக்கு தங்கையாக நடித்து பிரபலமான நடிகை வைஷ்ணவி. இவர் பேரன்பு சீரியலில் வானதி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். இந்த சீரியலில் இவர் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். மேலும், இந்த சீரியலில் நாயகனாக விமல் வெங்கடேசன் நடித்து வருகிறார். பாண்டவர் பூமி திரைப்பட நடிகை ஷமீதா ஸ்ரீகுமார் நாயகனின் அம்மாவாக ராஜேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

பேரன்பு சீரியல் :

இந்த சீரியல் தொடங்கியதில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
அடிக்கடி இந்த சீரியலில் அதிரடி திருப்பங்கள் வைக்கப்படுவதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியல் குறித்து தற்போது சோசியல் மீடியாவில் பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகின்றது. அது என்னவென்றால், சீரியல் எபிசோடில் இரண்டு பெண்கள் புடவை அணிந்து கொண்டு வந்து வெளியே செல்கிறார்கள். அதில் கதாநாயகி குடும்பப்பாங்கான புடவையும், இன்னொரு பெண் ஸ்லீவ்லெஸ் புடவையிலும் வந்து இருக்கிறார்.

சீரியலில் வந்த எபிசோட்:

அப்போது இவர்களை பார்த்து வழியில் நிற்கும் ரவுடிகள் கிண்டல் கேலி செய்கிறார்கள். உடனே போலீசிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டியவுடன் அந்த ரவுடி கும்பல் சென்று விடுகிறது. பிறகு கதாநாயகி நீங்கள் அணிந்திருக்கும் ஆடைகள் தான் இவ்வளவு பிரச்சினை கரணம். வெளியில் வரும்போது யாரும் நம்மை குறை சொல்லாத அளவிற்கு ஆடை அணியவேண்டும். ஆடை அழகாக இருக்க வேண்டுமே தவிர கவர்ச்சிக்காக இருக்கக்கூடாது. இந்த ஆடையில் உங்களுடன் வெளியே வருவதற்கு நான் முதலில் தயங்கினேன் என்று ஆடை குறித்து கதாநாயகி டயலாக் பேசி இருந்தார்.

-விளம்பரம்-

சீரியல் குறித்து சோசியல் மீடியாவில் எழும் சர்ச்சை:

தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் ஒருவரின் ஆடை குறித்து பேசுவது மிகவும் தவறான ஒன்று. இந்த சீரியலில் பெண்களே, பெண்களின் ஆடை குறித்து விமர்சிப்பது கன்டனத்திற்குரியது என்றும் சேனல் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கமெண்ட் தெரிவித்து வருகின்றார்கள். அதோடு இந்த சீரியல் குறித்து தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி வருகிறது.

சின்மயி போட்ட டீவ்ட்:

இந்த நிலையில் இந்த எபிசோடு குறித்து சின்மயி அவர்கள் டீவ்ட் போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, எப்பா சாமி! போட்டிருக்கிற துணியினால் ஈவ்டீசிங் பண்றாங்களாம். இரண்டு பேருமே புடவைதான் அணிந்திருக்கிறார்கள். இன்னும் சீரியலில் குடும்ப பெண்கள் இந்த மாதிரி டயலாக் பேசுவதை என்னால் நம்ப முடியவில்லை என்று கிண்டல் செய்யும் விதமாக டீவ்ட் போட்டிருக்கிறார். இப்படி சின்மயி பதிவிட்டு இருந்த டீவ்ட்டிற்கு பலரும் கமெண்ட் போட்டிருக்கிறார்கள்.

Advertisement