ராதாரவியை அவரது வீட்டில் தனிமையில் சந்தித்தால் தான் உறுப்பினராக முடியும்..!சின்மயி பகிர் புகார்..!

0
1452
Chinmayi-radharavi
- Advertisement -

தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து நடிகர் ராதாரவிகும் சின்மைக்கு மத்தியிலும் பிரச்னை முட்டிக்கொண்டது.

-விளம்பரம்-

தமிழ் திரைப்படங்களில் பின்னணி குரல் கொடுக்கும் கலைஞர்களின் பாதுகாப்புக்காக செயல்பட்டு வரும் சங்கம் டப்பிங் யூனியன். இதன் தலைவராக நடிகர் ராதாரவி பொறுப்பு வகித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க : ஓடும் MTC பேருந்தில் சுய இன்பத்தில் ஈடுபட்ட நபர்..!புகைப்படத்தை வெளியிட்ட சின்மயி..!

- Advertisement -

சமீபத்தில் பாடகியும், பின்னணி கலைஞருமான சின்மயி தாங்கள் வாங்கும் சம்பளத்தில் 10 சதவீத பணத்தை டப்பிங் யூனியன் பெற்றுக் கொள்கிறது என்று சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.இந்த குற்றச்சாட்டை மறுத்த டப்பிங் யூனியன் கண்டனத்தை தெரிவித்தது சின்மையை டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கியது. மேலும்,
சின்மயி ஒன்றரை லட்சம் முன்பணம் கொடுத்து, மன்னிப்பு கடிதம் கொடுத்து புது உறுப்பினர் படிவம் கொடுத்தால் மீண்டும் டப்பிங் யூனியனில் சேர்த்து கொள்வோம்’ என்றும் கூறியிருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சின்மயி, 2500 ருபாய் செலுத்தினாலே வாழ்நாள் உறுப்பினர் ஆக முடியும். நான் ஆரம்பத்திலேயே 15 ஆயிரம் செலுத்தியுள்ளேன் என்று கூறியுள்ளார்.மேலும், பூமா சுப்பாராவ் என்ற டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்கத்தில் சேர முயன்றபோது ராதாரவியை வீட்டில் சந்தித்தால் தான் புதிய உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்படும் என கூறியுள்ளனர். அதனால் அவர் 2 வருடம் கழித்து வேறு தலைவர் வந்தபிறகு சங்கத்தில் சேர்ந்தார். ராதாரவி செய்வது பற்றி குரூப்பில் பதிவிட்டதால் அவர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்” என சின்மயி புதிய குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement