தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர்.
அதே போல பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பல பெண்களும் பாடகி சின்மயிக்கு தனிப்பட்ட முறையில் மேசேஜ்களை அனுப்புகின்றனர். அதனை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் பாடகி சினமயியை மிகவும் கேவலமாக திட்டி தொடர்ந்து ஒரு நபர் மெசேஜ் செய்து வருகிறாராம்.
சின்மையி வைரமுத்து மீது முன்னுக்கு பின்னாண விடயங்களை பேசிவருவதால் சின்மையி கூறுவது போய் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.தற்பொழுது சின்மயின் ரசிகர் ஒருவர் அவர்களை பற்றி பாராட்டியும் தனக்கு ரீப்பிலே செயுமாறும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவுக்கு சின்மயி ரிப்ளை செய்யாததால் கடுப்பான ரசிகர் சின்மையை பச்சை பச்சையாக திட்டியுள்ளார். இந்த பதிவை சின்மயி ஸ்கரின்ஷாட் எடுத்து கலாச்சாரம் என்ற தலைப்பில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், சின்மயி ‘நான் இதற்கு ரிப்ளை செய்துவிட்டேன் பிரதர், உங்கள் குடும்பம் நல்ல குடும்பம்போல நல்ல வளத்திருக்காங்க’ என்று கூறியுள்ளார்.