ஒரு சிலர் கமன்ட் பண்ணா ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் திட்டுவீங்களா – நெட்டிசனுக்கு கடுப்பாகி சின்மயி பதில் (காரணம் வைரமுத்து பற்றிய கமன்ட் தான்)

0
231
chinmayi
- Advertisement -

சமீபத்தில் Twins குழந்தையை பெற்றெடுத்துள்ளதாக சின்மயி அறிவித்து இருந்த நிலையில் சமூக வலைதளத்தில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதே சமயம் பலரும் சின்மயியை கேலி செய்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தனது குழந்தை பிறந்ததை வைரமுத்துவுடன் ஒப்பிட்டு கேலி செய்த ரசிகருக்கு சின்மயி பதிலடி கொடுத்துள்ளார். பின்னணி பாடகி சின்மயி கடந்த 2014 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ராகுல் வேறு யாரும் இல்லை 2010 ஆம் ஆண்டு வெளியான மாசுகோவின் காவேரி படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் தான். மேலும், இவர் நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் இயக்குனர் ஆவார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவர் தமிழ், தெலுங்கு என்று பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் நடித்த எந்த படமும் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெற்றியடையவில்லை. மேலும், இவர் 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு மன்மதடு 2 என்ற படத்தை இயக்கி இருந்தார். இதில் நாகர்ஜுனா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்து இருந்தார்.

இதையும் பாருங்க : 60 வயது நடிகரை நாலாவது திருமணம் செய்த வீட்ல விசேஷம் பட நடிகை ? – அட, இவங்களா ? (மகேஷ் பாபுவின் புதிய அண்ணியா ? )

- Advertisement -

8 ஆண்டுகள் கழித்து பிறந்த Twins :

ராகுல் – சின்மயி தம்பதிக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில் குழந்தை இல்லாமல் தான் இருந்து வந்தது. அதே போல பாடகி சின்மயியும் வயதாகி கொண்டே போனதால் இவருக்கு குழந்தை இல்லாததை வைத்து பல முறை இவரை சமூக வலைதளத்தில் கேலிகள் கூட செய்து இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் சின்மயிக்கு டபுள் சந்தோசமாக Twins குழந்தைகள் பிறந்துள்ளது.

வைரமுத்துவுடன் ஒப்பிட்டு கேலி :

இதற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் ஒரு சிலர் சின்மயியை கேலி செய்து வருகின்றனர். அதற்கு சின்மயியும் பதிலடி கொடுத்து வருகிறார். அந்த வகையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் ‘2 குழந்தைகளையும் வைரம் மற்றும் முத்து போல பார்த்து கொள்ளுங்க என்று பதிவிட்டுள்ளார்.’ இதற்க்கு பதில் அளித்த சின்மயி ‘உன்னல்லாம் பெத்தாங்க பாரு அவங்கள சொல்லணும்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-

தமிழ் நாடு குறித்து சின்மயி :

மேலும், இந்த கமண்ட் குறித்து மேலும் பதிவிட்டுள்ள சின்மயி ‘எனக்கு குழந்தை பிறந்ததை அறிவித்து இருந்ததில் இருந்தே பல தமிழ் நெட்டிசன்கள் நான் மீ டூவின் போது குறிப்பிட்ட அந்த சில்மிஷவாதியை போல தான் என் குழந்தையும் செய்யும் என்று கூறி வருகின்றனர். இந்தியாவில் இருக்கும் இந்த மாநிலம் தான் முன்னேற்றத்தை பற்றியும், பெண்ணியம் பற்றியும் பேசும் மாநிலம். இதனால் தான் நான் கர்ப்பமாக இருந்ததை பற்றி சமூக வலைதளத்தில் பேசவே இல்லை. இந்த சாக்கடை குப்பைகள் தான் தமிழ் நாட்டில் அதிலும் குறிப்பாக சமூக வலைதளத்தில் தான் அதிகம் குறைக்கும் கூட்டங்கள்.

நெட்டிசனுக்கு பதிலடி :

இது போன்ற நபர்களுக்கு மத்தியில் தான் நம் குழந்தை இருக்கிறது எனவே எச்சரிக்கையாகவும், ஜாக்கிரதையாகவும் இருங்கள்.’என்று ஆவேசமுடன் பதிவிட்டு இருக்கிறார். சின்மயின் இந்த பதிவை பார்த்த ட்விட்டர் வாசி ஒருவர் ‘ட்விட்டரில் வரும் கமெண்டுகளை வைத்து ஒரு ஒட்டு மொத்த மாநிலத்தையும் இப்படி சொல்லிவிடுவீர்களா, அற்புதம்’ என்று கமெண்ட் செய்தார். இதற்கு சின்மயி ‘ஆமா, அப்படி தான், பிடிக்காட்டா கிளம்புங்க’ என்று கடுப்புடுன் கூறியுள்ளார்.

Advertisement