‘சன்னி லியோன் எப்படி வந்திருக்காங்க, தர்ஷா எப்படி வந்திருக்காங்க’ – சதீஷின் பேச்சை கேட்டு சின்மயி போட்ட பதிவு.

0
613
chinmayi
- Advertisement -

தர்ஷா குப்தாவின் உடையை சன்னி லியோனுடன் ஒப்பிட்டு காமெடி நடிகர் சதீஷ் பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் இளசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர். இவர் சின்னத்திரை சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பரிச்சயமாகி இருந்தார். அதிலும் இவர் ஜி தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி இருந்த “முள்ளும் மலரும்” என்ற தொடரின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின் சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிந்த “மின்னலே” என்கிற தொடரில் நடித்து இருந்தார். அதேபோல் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த செந்தூரப்பூவே என்ற தொடர் முடிவடைந்தது. இந்தத் தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் தர்ஷா குப்தா நடித்திருந்தார். இப்படி இத்தனை நாடகத்தில் இவர் நடித்தாலும் மக்கள் மத்தியில் பெரியதாக பிரபலம் அடையவில்லை.

- Advertisement -

ஆகவே, சினிமா நடிகைகள் முதல் சீரியல் நடிகைகள் வரை என பல பேர் பயன் படுத்திய யுத்தியை தான் தர்ஷா கையாண்டு இருந்தார். அதாவது இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பது. இதனால் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் தான் இவர் பிரபலமாகி இருக்கிறார். அந்த பிரபலத்தினால் தான் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக பேராதரவைப் பெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்து இருந்தது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு பட வாய்ப்பும் கிடைத்து இருந்தது. திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார் மோகன். இந்த படத்தில் குக் வித் கோமாளி தர்ஷா நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் ராதாரவி, கௌதம் வாசுதேவ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் தர்ஷா குப்தாவிற்கு சினிமாவின் எண்ட்ரியாக அமைந்தது. இப்படி ஒரு நிலையில் இவர் ‘Oh My Ghosht’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரபல ஆபாச நடிகை சன்னி லியோன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், காமெடி நடிகர் சதீஷ், டிக் டாக் புகழ் ஜி பி முத்து உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய சதிஷ் ‘சன்னி லியோன் பாம்பேவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். அவங்க எப்படி டிரஸ் செய்து இருக்கிறார்கள் என்று பார்த்தீர்கள். கோயம்புத்தூரில் இருந்து ஒரு பொண்ணு வந்திருக்கிறது ‘தர்ஷா குப்தா’ அவங்க எப்படி நம்ம கலாச்சாரத்தில் வந்திருக்கிறார்கள் என்பதை சும்மா சொன்னேன்’ என்று தர்ஷா குப்தாவை கலாய்த்து இருக்கிறார். இவரின் இந்த பேச்சைக் கண்டு நிட்டிசன்கள் பலரும் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

சின்மயி போட்ட பதிவு :

இப்படி ஒரு நிலையில் பின்னணி பாடகியான சின்மயியும் இந்த வீடியோ குறித்து தனது எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார். அதில் ‘அதாவது – உண்மையில் ஒரு பெண்ணை சுட்டிகாட்டி, கலாச்சாரத்திற்கு ஏற்ப ஆடை அணியாத ஒரு பெண்ணின் மீது ஒரு ஆணால் ஒரு கூட்டத்தின் முன் எளிதாக கேட்க முடியும். ஆண்களின் இந்த நடத்தை எப்போது நிறுத்தப்படும்?’ என்று பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement