தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளில் சின்மையியும் ஒருவர். இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்துள்ளது. அதிலும் இவர் வைரமுத்து வரிகளில் ஏ ஆர் ரகுமான் இசையில் பல்வேறு பாடல்களை பாடி இருக்கிறார். ஆனால் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிகும் வைரமுத்துவுக்கு ஒரு பணிப்போரே ஏற்பட்டது. அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது.

Advertisement

சின்மயி வைரமுத்து மீது குற்றச்சாட்டை வைத்ததால் சின்மயி டப்பிங் யூனியன் உறுப்பினர் தகுதியையும் இழந்தார். அதே போல சின்மயின் குற்றச்சாட்டால் தான் வைரமுத்து, மணி ரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும், வைரமுத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து சின்மயி தனது சமூக வலைதளத்தில் நியாயம் ஜெயித்து விட்டதாக மகிழ்ச்சி பொங்க பதிவிட்டிருந்தார். இப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் சின்மயி சமூக வலைத்தளத்திலும் பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறார்.

இதையும் பாருங்க : நைட் 10 மணிக்கு ஐடி விசாரணை செய்ய அதிகாரிகள் வந்திருந்தார்கள். இது அஜித்துக்கும் நடந்திருக்கு.

Advertisement

சின்மையி வைரமுத்து மீது முன்னுக்கு பின்னாண விடயங்களை பேசிவருவதால் சின்மையி கூறுவது பொய் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.அதே போல இலங்கையை சேர்ந்த கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன் ஒருவன் பாடகி சின்மையிக்கு ஆபாசமான மெசேஜ்களை அனுப்பியுள்ளார். அதனை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் சின்மயி, மேலும் சின்மயின் இந்த பதிவால் சின்மயிடம் ஆபாசமாக பேசிய அந்த மாணவனின் புகைப்படத்தை இலங்கை செய்தி நிறுவனம் ஒன்று தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

Advertisement

அதில் யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி தொழில்நுட்பபீட முதலாம் ஆண்டு மாணவி அங்கு படிக்கும் காமவெறிக் காவாலிகளால் செய்த பாலியல் கொடுமை தாங்காது தற்கொலை முயற்சி. இவர்கள் இந்தப் பெண்ணின் தொலைபேசி இலக்கத்தை பெற்று அநாகரிகமாக வாட்ஸப் செயலியில் குழுவாகவும் தனியாகவும் நிர்வாணமாக படங்கள் காணொளி அனுப்புமாறு பாலியல் துன்புணர்வு செய்துள்ளனர். இவரின் அப்பா எங்களுக்கு இந்த காவாலிகளின் தொலைபேசி இலக்கங்கள் தந்துள்ளார். இதே இயக்கம் இப்போது இருந்திருந்தால் என்று பதிவிட்டுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் தமிழ் சினிமா டப்பிங் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட நடிகர் ராதாரவி, பின்னணி பாடகி சின்மயி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். சின்மயி சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக கூறி அவர் மனுதாக்கல் செய்ய சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சின்மயின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்து பின்னர் ராதாரவியையே மீண்டும் தலைவராக தேர்வு செய்து உள்ளனர். இதனால் சின்மயி நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

Advertisement