நைட் 10 மணிக்கு ஐடி விசாரணை செய்ய அதிகாரிகள் வந்திருந்தார்கள். இது அஜித்துக்கும் நடந்திருக்கு.

0
9512
vijay-ajith
- Advertisement -

பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் நடித்து வரும் படம் “மாஸ்டர்”. மாநகரம்,கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய் அவர்களை வருமான துறையினர் சோதனைக்காக அழைத்து சென்றார்கள். இது சமூக வலைதளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. இது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும், விஜய் வீட்டில் நடந்த ஐடி விசாரணை குறித்து சமூக வலைத்தளங்களில் பல பிரபலங்கள் பேட்டி அளித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

இந்த வீடியோவை 4.17 நிமிடத்தில் இருந்து பார்க்கவும்:

- Advertisement -

இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் பேரரசு அவர்கள் தன்னுடைய படத்தில் நடந்த ஐடி விசாரணையும் குறித்தும், விஜய்க்கு நடந்த அநியாயத்தை குறித்தும் பேசி உள்ளார். இவர் விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார். இந்த இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பேட்டியில் பேரரசு கூறியது, விஜய் அவர்களுக்கு இது ஒன்றும் புதியதாக நடக்கும் ரைட் கிடையாது. இது பல முறை நடந்து உள்ளது. விஜய் அவர்கள் மட்டும் அல்ல பல நடிகர்களின் வீட்டில் இந்த மாதிரி ஐடி விசாரணை நடந்துள்ளது. நானும் இதே மாதிரி தல அஜித்தின் நடிப்பில் வெளிவந்த திருப்பதி படத்தின் போது சந்தித்து உள்ளேன்.

திருப்பதி படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது நைட் 10 மணிக்கு ஐடி விசாரணை செய்ய அதிகாரிகள் வந்திருந்தார்கள். அதிகாரிகள் ஷூட்டிங் நிறுத்துங்கள் விசாரணை நடத்த வேண்டும் என்று சொன்னார்கள். ஒரு படத்தின் படப்பிடிப்பு நிறுத்துவது என்பது நான் மட்டும் முடிவெடுப்பது கிடையாது. அதில் முக்கிய பங்கு தயாரிப்பாளருக்கு உள்ளது. ஒரு படம் வெளிவர தயாரிப்பாளர் பங்கு அதிகம் உள்ளது. திடீரென்று ஷூட்டிங் நிறுத்தப்பட்டால் தயாரிப்பாளர் தான் மிகவும் பாதிக்கப்படுவர் என்று சொன்னேன். அதிகாரிகளும் நான் ஷூட்டிங் முடித்து வரும் வரை காத்துக் கொண்டு இருந்தார்கள். அதே மாதிரி படத்தின் ஷூட்டிங் நடக்கும் போது வந்து விஜய்யிடம் ஷூட்டிங் நிறுத்துங்கள் என்று சொல்வது ரொம்பத் தவறான விஷயம்.

-விளம்பரம்-

ஷூட்டிங் நிறுத்தினால் விஜய்க்கு நஷ்டம் கிடையாது. அந்த படத்தின் தயாரிப்பாளர் தான் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படுவார். அந்த இழப்புக்கு யார் சரி செய்ய முடியும். விஜய் அவர்களை தனிப்பட்ட முறையிலோ, அவருடைய வீட்டிலோ விசாரிக்கலாம். அப்போது எந்த பிரச்சனையும் கிடையாது. சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது அவரை அதிகாரிகள் விசாரிக்க வந்து கூட்டிட்டு போகும் தான் பல பிரச்சனைகள் நடக்கிறது. இதனால் பிற நடிகர்களின் கால்ஷீட், தயாரிப்பாளர்கள் நஷ்டம் என பல விஷயங்களை யோசிக்க வேண்டும். இந்த நிகழ்வை பல அரசியல்வாதிகள் பயன்படுத்துகிறார்கள். ஐடி விசாரணை என்பது அரசாங்கம் அவர்களுடைய வேலை செய்கிறதே தவிர வேறு ஒன்றும் கிடையாது. ஆனால், இதை அரசியல்வாதிகள் தான் பெரிய பிரச்சனை செய்கிறார்கள் என்று கூறினார்.

Advertisement