‘கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்’ – வைரமுத்து பதிவை கேலி செய்த BJP பிரபலம்- சின்மயின் நக்கல்.

0
934
Chinmayi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். மேலும், இவர் இதுவரை 5800 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். இவர் திரை உலகில் முதலில் இளையராஜாவுடன் பிறகு ஏ ஆர் ரகுமான் உடன் இணைந்து பாடல்களை எழுதி இருக்கிறார். இவர் சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார்.

-விளம்பரம்-

இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார். இருந்தாலும் பலர் வைரமுத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருந்தார்கள். ஆனால், உண்மையில் பாடகி சின்மயி கூறும் இந்த குற்றச்சாட்டு உண்மை இருக்கிறதா என்று பலரும் சந்தேகித்து வருகின்றனர்.

- Advertisement -

வைரமுத்து பதிவிட்ட புகைப்படம் :

இதனைத் தொடர்ந்து கவிஞர் வைரமுத்து எது செய்தாலும் அவரை குறித்து சின்மயி விமர்சித்துப் பேசி வருகிறார்.சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர், பாபி சின்கா நடிக்கும் புதிய படத்திற்கு தடை என்று பெயர் வைத்திருக்கிறேன். படப்பிடிப்பை தொடங்கி வைத்தேன். கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மாலை சூட்டி மகிழ்ந்தார்கள்.

கங்கை அமரன் போட்ட பதிவு :

சின்ன சின்ன கொண்டாட்டங்களே வாழ்க்கை என்று பதிவிட்டிருந்தார். மேலும், அந்த புகைப்படத்தில் நடிக்கும் நாயகிகளுக்கு மத்தியில் வைரமுத்து நிற்பது போன்று இருந்தது.இந்த நிலையில் அந்த புகைப்படத்தை டேக் பேக் செய்து இசையமைப்பாளர் கங்கை அமரன்பதிவு ஒன்றை போட்டு இருந்தார். ” கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே” என்று கமெண்ட் செய்து இருக்கிறார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

சின்மயின் ரியாக்ஷன் :

இதை பார்த்த பலரும் உங்களுக்கு பயங்கர நக்கல் என்று கமன்ட் செய்து வருகின்றனர். இதற்கு சின்மயி சும்மா இருப்பாரா அவரும் தன் பங்கிற்கு இந்த ட்வீட்டை ரீ ட்வீட் செய்து இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வைரமுத்து இலக்கிய உலகில் நுழைந்து ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

This image has an empty alt attribute; its file name is 123-13.jpg

முதல்வர் பதிவிற்கு சின்மயி போட்ட பதிவு :

இதை பார்த்து சின்மயி கொந்தளித்துப் போய் டீவ்ட் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியது, இந்த வாவை பாத்துட்டு அவர பாராட்டுறீங்களே என்று அறிவாளிகள் தான் கேப்பாய்ங்க. எத்தன பொண்ணுங்க மேல கைய்ய வெச்சாலும் எல்லா சப்போர்டும் உண்டுன்னு வெட்ட வெளிச்சமா தெரியுதே நம்ம முற்போக்கு நாட்ல. பெண்கள் இங்க பாதுகாப்பு எல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. நாம நம்ம வேலைய பாப்போம் என பதிவிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement