ஆம்பளையா இருந்தா இத செஞ்சிட்டு அப்புறம் கால் பண்ணுங்க.! கேள்வி கேட்கும் நபர்களுக்கு சின்மயி சவால்.!

0
1166
- Advertisement -

தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர். 

-விளம்பரம்-

வைரமுத்து மீதான பாடகி சின்மயியின் முன்வைத்த பாலியல் புகார் தமிழ் சினிமாவையே உலுக்கியுள்ள நிலையில் பாடகி சின்மயி மீது சமூகவலைத்தளத்தில் பல்வேறு கருத்து தாக்குதலை முன்வைத்தனர். சின்மயி சொல்வது பொய் என்று ஒரு தரப்பும்.

- Advertisement -

சின்மயி கூறுவது உண்மை என்றால் இப்போதே ஏன் சொல்லவில்லை என்று மற்றொரு தரப்பும் சின்மயியை வறுத்தெடுத்து வருகின்றனர். சமீபத்தில் வழக்கறிஞர் ஒருவர் இதே போன்ற கேள்வி கேட்க, ஆத்திரமடைந்த சின்மயி தன்னை குறை சொல்லும் நபர்களுக்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சின்மயி,
கணவரை தவிர நீ யாரிடம் படுக்கிறாய் என கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, ஆம்பளையாக இருந்தால் ‘உண்மை கண்டறியும் சோதனைக்கு ஏற்பாடு செய்துவிட்டு கால் செய்யுங்கள்” என வழக்கறிஞரான அந்த நபருக்கு சவால் விட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement