கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் குறித்து பேசுகையில் தன்னையும் மறைமுகமாக தாக்கி பேசிய அபிராமிக்கு சின்மயி பதிலடி கொடுத்துள்ளார். சென்னை அடுத்த திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணி தேவி கலை கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பரதநாட்டியம் உள்ளிட்ட பல கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றது. மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி முறையில் இந்த கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியில் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலைகளில் இருந்து பல முக்கிய கலைஞர்களை நம் நாட்டிற்கு இந்த நிறுவனம் வழங்கி இருக்கிறது.

இந்த நிலையில் கலாஷேத்ரா சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்றால் ஆசிரியரின் விருப்பங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பேராசிரியர்கள் தெரிவித்தும், அத்துமீறி மிரட்டியும் நடந்ததாகவும் மாணவிகள் புகார் அளித்து இருந்தார்கள். மேலும், பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது மாணவிகள் கல்லூரி இயக்குனர் ரேவதி இராமச்சந்திரன் இடம் புகார் அளித்தார்கள். ஆனால், அந்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுத்தால் கல்லூரியின் பெருமை சீர்குலையும் என்றும் இந்த மாதிரி கட்டுக் கதைகளை பேசக்கூடாது என்றும் நிர்வாகம் மாணவிகளுக்கு தடை விதித்தது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் கல்லூரி வளாகத்தின் வெளியே போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தார்கள். இந்த விஷயம் பெரிய பூகம்பமாக வெடித்தது. மாணவிகள் கொடுத்த ஆதாரங்களை எல்லாம் திரட்டி தேசிய மகளிர் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து கலாஷேத்ரா அறக்கட்டளையில் பேராசிரியர் பாலியல் புகார் தொடர்பாக விசாரணை குழு ஒன்று அமைத்தது.மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
see her facial reactions.. As if students are lying and framing her all time favorite teachers who are very innocent.. now here is the other side of the story. what is her response for this.. pic.twitter.com/0NIzgURhtm
— CommonMan 🇮🇳 (@YaIAmAnIndian) April 5, 2023
இந்நிலையில் இது குறித்து நடிகை அபிராமி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், எனக்கு கலாஷேத்ரா பத்தி பேச விருப்பமில்லை. நானும் இந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி தான். ஒரு பக்கம் இருக்கும் தரப்பை வைத்து மட்டும் பேசக்கூடாது. நான் பல வருடமாக இந்த கல்லூரியில் இருந்தேன். இந்த கல்லூரியின் மூலம் பல நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன். பல மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அப்போதெல்லாம் இந்த மாதிரி எந்த ஒரு குற்றச்சாட்டும், புகாரும் எழுந்தது கிடையாது.நான் இந்த கல்லூரியின் நிர்வாகி ரேவதி மேடமுக்கு தான் ஆதரவாக நிற்பேன். கலாஷேத்ரா என்ற பெயரை ஒழுங்காக சொல்லத் தெரியாதவர்கள் எல்லாம் இந்த கல்லூரியை பற்றி குறை கூறுவது ரொம்ப மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. 10 வருடம் ஆக இந்த பிரச்சனை இருக்கிறது என்று சொல்கிறார்கள். ரேவதி மேடம் அப்போதெல்லாம் இந்த கல்லூரியை நிர்வகிக்கவில்லை.
View this post on Instagram
குற்றம் சாட்டிருக்கும் ஆசிரியருக்கு ஒரு வாய்ப்பை தரவில்லை. அவரிடம் என்ன? ஏது? என்று கேட்காமல் தண்டனை கொடுப்பது சரி இல்லை. இந்த கல்லூரிக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்று போலீஸ், மீடியா வருவதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், தற்போது இந்த புகார் வந்தது நினைத்தால் மனது வலிக்கிறது. ஒரு பக்கமாக நின்று பேசாமல் இருதரப்பும் விசாரித்து முடிவெடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
அபிராமியின் இந்த கருத்தை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவரெல்லாம் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தது தான் கொடுமை என்றெல்லாம் கமன்ட் செய்து வருகின்றனர். அதே போல அந்த பேட்டியில் 'எந்த ஒரு பாலியல் தொல்லை நடந்தாலும் அந்த விஷயம் நடக்கும் போதே அதைப்பற்றி ஓபன் ஆக பேச வேண்டும். இதேபோன்று ஒருத்தர் ஏற்கனவே செய்து இருக்கிறார். நன்றாக வளர்ந்து விட்டு ஏறி உக்காந்த பின்னர் ஓடுவது வேஸ்ட் என்றும் கூறி இருந்தார் அபிராமி.

அபிராமியின் இந்த குறிப்பிட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சின்மயி 'உண்மையைஅப்போதே சொன்னாலும் தாமதமாக சொன்னாலும் அது உண்மைதான். நீங்கள் நம்பினாலும் அல்லது நம்பாவிட்டாலும் ஒரு உண்மை பொய்யாகி விடாது என்று பதிவிட்டு இருக்கிறார். அதே போல தனக்கு நேர்ந்தபாலியல் தொல்லையை போன்று பிரபல ஹாலிவுட் பாடகி லேடி காகாவிற்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்த செய்தியையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் சின்மயி.






