முதன் முறையாக தனது twins குழந்தைகளின் முகத்தை காட்டிய சின்மயி – Cute புகைப்படங்கள் இதோ

0
1857
- Advertisement -

முதல்முறையாக தன்னுடைய இரட்டை குழந்தைகளின் முகத்தை சோசியல் மீடியாவில் சின்மயி பகிர்ந்து இருக்கும் தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் சின்மயி . இவர் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதனை தொடர்ந்து இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே ஒரு பணிப்போரே ஏற்பட்டது. தற்போது இவர்கள் இருவருக்கும் மத்தியில் பிரச்சனை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதனிடையே பின்னணி பாடகி சின்மயி கடந்த 2014 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

சின்மயி-ராகுல் திருமணம்:

இவர் வேறு யாரும் இல்லை 2010 ஆம் ஆண்டு வெளியான மாஸ்கோவின் காவேரி படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் தான். மேலும், இவர் நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் இயக்குனர் ஆவார். அதன் பின்னர் இவர் தமிழ், தெலுங்கு என்று பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் நடித்த எந்த படமும் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெற்றியடையவில்லை. மேலும், இவர் 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் இயக்குனராக அறிமுகமானார்.

ராகுல் திரைப்பயணம்:

அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு மன்மதடு 2 என்ற படத்தை இயக்கி இருந்தார். இதில் நாகர்ஜுனா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்து இருந்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்தும் வருகிறார். இப்படி ஒரு நிலையில் ராகுல் – சின்மயி தம்பதிக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில் குழந்தை இல்லாமல் தான் இருந்து வந்தது.

-விளம்பரம்-

சின்மயிக்கு பிறந்த குழந்தைகள்:

அதே போல பாடகி சின்மயியும் வயதாகி கொண்டே போனதால் இவருக்கு குழந்தை இல்லாததை வைத்து பல முறை இவரை சமூக வலைதளத்தில் கேலிகள் கூட செய்து இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் சின்மயிக்கு டபுள் சந்தோசமாக Twins குழந்தைகள் பிறந்தது. இதுகுறித்து கூட சின்மயி ‘“ட்ரிப்தா மற்றும் ஷ்ரவாஸ், எங்களது புதிய மற்றும் என்றைக்குமான பிரபஞ்சத்தின் மையம் இனி இவர்கள் தான் என்று கூறி இருக்கிறார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.

https://www.instagram.com/p/CtocwUaRCs5/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

சின்மயி குழந்தைகள் புகைப்படம்:

இந்நிலையில் சின்மயின் குழந்தைகள் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, முதன்முதலாக சின்மயி அவர்கள் தன்னுடைய இரட்டை குழந்தைகளின் முகத்தை காண்பித்திருக்கிறார். இவருக்கு ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை பிறந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது குழந்தைகளின் முகம் தெரியும் புகைப்படத்தை தான் இன்ஸ்டாவில் சின்மயி பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள்.

Advertisement