விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் தொடர்களில் ஒன்று தான் காற்றுக்கென்ன வேலி சீரியல். இந்த சீரியல் கடந்த ஆண்டு தான் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. தற்போது இந்த தொடர் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் தொடர் ஆக மாறியுள்ளது. இந்த தொடரில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் பிரியங்கா நடித்து வருகின்றனர். ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கும் வெண்ணிலாவுக்கு அவருடைய அப்பா கல்யாண ஏற்பாடு செய்கிறார். ஆனால், வெண்ணிலா கல்யாண நாளன்று வீட்டை விட்டு வெளியேறி தன் கனவை நனவாக்க போராடுகிறார்.
இதனால் வெண்ணிலாவுக்கு பல்வேறு வகையில் பிரச்சனைகள் வருகிறது. இருந்தும் ஹீரோ வெண்ணிலாவுக்கு உறுதுணையாக நிற்கிறார். இப்படி பல விறுவிறுப்புடன் இந்த சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. இப்படி சீரியல் சென்று கொண்ட போது இந்த சீரியல் இருந்து கதாநாயகன் விலகி இருந்தார். மேலும், சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம், என்னுடைய இன்னொரு பிராஜக்ட்க்கும் காற்றுக்கென்ன வேலி சீரியலுக்கும் நேரம் ஒதுக்குவதில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு இருக்கு. அது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.
காற்றுக்கென்ன வேலி சீரியலில் விலகிய நடிகர்கள்:
எதையுமே என்னால் ரொம்ப பண்ண முடியல. இதனால் காற்றுக்கு என்ன வேலி டீமுக்கும் எனக்கும் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தான் நான் சீரியல் இருந்து விலகி உள்ளேன் என்று சூர்யா கூறி இருந்தார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு முன்னே காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து சூர்யாவின் அம்மாவாக சாரதா கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகா அவினாஷ் விலகியிருந்தார். அதேபோல் ஹீரோவுக்கு பெரியம்மாவாக இருந்த வரும் விலகி வேறு ஒருவர் நடித்து வருகிறார். இப்படி கடந்த சில மாதங்களில் இந்த சீரியல் இருந்து நிறைய கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டு இருந்தது.
காற்றுக்கென்ன வேலி சீரியலில் பிரியங்கா:
இருந்தாலும் இந்த சீரியல் சுமுகமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகை பிரியங்கா புது படம் ஒன்றில் நடித்து உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. காற்றுக்கென்ன வேலி சீரியலில் கதாநாயகியாக வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரியங்கா. நடிகை பிரியங்கா கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மைசூரில் தான். இவர் மாடல் அழகியாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார். பின் இவர் கன்னட சேனலில் ஒளிபரப்பான கிருஷ்ணா துளசி சீரியல் மூலம் அறிமுகமானார்.
நடிகை ப்ரியங்கா நடித்த சீரியல்கள்:
அந்த தொடர் கன்னடத்தில் மாபெரும் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சாக்லேட் என்ற தொடரில் நடித்து தமிழ் சீரியலுக்கு அறிமுகமானார். இந்த தொடர் மலையாளத்தில் ஒளிபரப்பான ‘சாக்லேட்’ என்ற சீரியலின் ரீ – மேக் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் காற்றுக்கென்ன வேலி தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். மேலும், இவர் சீரியலில் இருந்து விலகுவதாக சோசியல் மீடியாவில் பல வதந்திகள் வந்து இருந்தது. ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் விலகவில்லை என்று பதிவு போட்டிருந்தார். இந்நிலையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.
நடிகை ப்ரியங்காவின் புது படம் போஸ்ட்:
அது என்னவென்றால், பிரியங்கா அவர்கள் Addhuri Lover என்ற பெயரில் உருவாகியுள்ள திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், காதலர் தினத்தை முன்னிட்டு தான் நடித்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரியங்கா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் பிரபல நடிகருடன் மாடர்ன் உடையில் மிக நெருக்கமாக உட்கார்ந்து இருப்பது போல் போஸ் கொடுத்திருக்கிறார். இது பார்ப்பதற்கு செம மாஸாக இருக்கிறது. மேலும், இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் பிரியங்காவிற்கு வாழ்த்துக் கூறி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் படம் எப்போது ரிலீஸ் ஆகப் போகிறது என்றெல்லாம் கேட்டு வருகிறார்கள்.