ஆடையில்லாமல் புகைப்படத்தை கேட்ட நபர்.! சின்மயி அனுப்பிய புகைப்படம்.!

0
1662

தமிழ் சினிமாவில் பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பாடகி சின்மயி. ஆனால், தற்போது தமிழ் சினிமாவில் ஒரு சர்ச்சைக்குரிய பாடகி என்ற அளவிற்கு வந்து விட்டார். தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

வைரமுத்து மீதான பாடகி சின்மயியின் முன்வைத்த பாலியல் புகார் தமிழ் சினிமாவையே உலுக்கியுள்ள நிலையில் பாடகி சின்மயி மீது சமூகவலைத்தளத்தில் பல்வேறு கருத்து தாக்குதலை முன்வைத்தனர். சின்மயிசொல்வது பொய் என்று ஒரு தரப்பும் கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்க : பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கும் தேதி வெளியானது.! லேட்டஸ்ட் அப்டேட்.! 

- Advertisement -

சின்மயி கூறுவது உண்மை என்றால் இப்போதே ஏன் சொல்லவில்லை என்று மற்றொரு தரப்பும் சின்மயியை வறுத்தெடுத்து வருகின்றனர். அதே போல சின்மையை திட்டி தீர்த்து தினந்தோறும் அவருக்கு பல ஆபாச மெசேஜ்களும் செல்கின்றனர்.

அதனை சின்மயி தனது சமூக வலைதளத்தில் பதிவிடுகிறார். இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஒரு நபர் “உங்கள் நிர்வாண போட்டோ அனுப்புங்கள்” என இன்பாக்ஸ் செய்துள்ளார். அதற்கு சின்மயி nude மேக்கப் கிட் புகைப்படத்தை அனுப்பி அவருக்கு நோஸ்கட் கொடுத்துள்ளார். இதனால் அந்த நபர் தனது பெயரையே மாற்றியுள்ளார்.

Advertisement