‘தான் பல முறை கற்பழிக்கப்பட்டாதாக முகநூல் பக்கத்தில் வெளியிடபட்ட செய்தி’ – சின்மயி அளித்த ஆவேச பதில்.

0
405
Chinmayi
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளில் சின்மையியும் ஒருவர். இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்துள்ளது. அதிலும் இவர் வைரமுத்து வரிகளில் ஏ ஆர் ரகுமான் இசையில் பல்வேறு பாடல்களை பாடி இருக்கிறார். ஆனால் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிகும் வைரமுத்துவுக்கு ஒரு பணிப்போரே ஏற்பட்டது. அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது.

-விளம்பரம்-

சின்மயி வைரமுத்து மீது குற்றச்சாட்டை வைத்ததால் சின்மயி டப்பிங் யூனியன் உறுப்பினர் தகுதியையும் இழந்தார். அதே போல சின்மயின் குற்றச்சாட்டால் தான் வைரமுத்து, மணி ரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும், வைரமுத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து சின்மயி தனது சமூக வலைதளத்தில் நியாயம் ஜெயித்து விட்டதாக மகிழ்ச்சி பொங்க பதிவிட்டிருந்தார்.

இதையும் பாருங்க : சாம்பாதித்து வைத்த பேர் புகழையெல்லாம் இழந்துவிட வேண்டாம் – விமர்சனங்களுக்கு உள்ளான ரஜினியின் இரங்கல் பதிவு.

- Advertisement -

இப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் சின்மயி சமூக வலைத்தளத்திலும் பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறார். இந்த நிலையில் தமிழர் நாடு என்ற முகநூல் பக்கத்தில், சின்மயி குறித்து அவதூறான பதிவு பதிவிடப்பட்டிருந்து. அந்த பதிவில் ‘பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் என்னை மிரட்டி பலமுறை கற்பழித்துள்ளார் அதனால் நான் பல முறை கருக்கலைப்பு செய்தேன்’ என்று சின்மயி கூறியதாக குறிப்பிடபட்டிருந்தது.

chinmayi

இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக பரவ இதுகுறித்து பதிவிட்டுள்ள சின்மயி ‘தமிழ்நாட்டில் இருக்கும் கத்துக்குட்டிகள் தொடர்ந்து இப்படி செய்து கொண்டு வருகின்றனர். ஒரு அங்கள் கூட இந்த பதிவில் கமெண்ட் செய்திருக்கிறார். இந்த பதிவில் நான் பலமுறை கற்பழிக்கப்பட்டதாகவும் கருக்கலைப்பு செய்ததாகவும் கூறுகிறது. ஆனால், நான் கருக்கலைப்பு செய்வது பற்றியும் என்னுடைய பெண்ணுறுப்பு பற்றியும் ஏன் இவர்களுக்கு இவ்வளவு அக்கறை. ஆனால், கற்பழிக்கும் ஆணுறுப்பை பற்றி இவர்கள் கண்டுகொள்வதில்லை. இந்த முகநூல் பக்கத்தை 2 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் பின் தொடர்ந்து இருக்கிறார்கள். ஆனால், ஏன் யாரும் இப்படி ஒரு பதிவை பார்த்து கேள்வி கேட்காமல் இதனை பகிர்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை’ என்று பதிவிட்டுள்ளார் சின்மயி.

-விளம்பரம்-
Advertisement