கடந்த சில தினங்களுக்கு முன்னர் மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் மறைவிற்கு ஆடியோ பதிவு மூலம் நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தன் மகள் துவங்கிய Hoote செயலி மூலம் தன் இரங்கலை தெரிவித்துள்ள ரஜினி’ நான் மருத்துவமனையில் இருந்தபோது அகால மரணம் அடைந்து விட்டார். அந்த செய்தி எனக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் சொல்லப்பட்டது. அதை கேட்டு நான் மிக மிக வேதனை அடைந்தேன். என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த குழந்தை, திறமையான அன்பும் பண்பும் கொண்ட அருமையான குழந்தை, புகழின் உச்சியில் இருக்கும் நேரத்தில் இவ்வளவு சின்ன வயதில் அவர் மறைந்திருக்கிறார்.
அவருடைய இழப்பை கன்னட சினிமாத் துறையால் ஈடு செய்யவே முடியாது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பதாருக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை. புனித் ஆத்மா சாந்தி அடையட்டும்’இதை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரஜினி, நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை புனீத், Rest in peace my child என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் பாருங்க : சாதி குறித்த உரையாடல் நிகழ்ந்ததா? என்ன நடந்தது ஏர் போர்டில், அந்த நபர் ஏன் தாக்கினார் – விஜய் சேதுபதி தரப்பு விளக்கம்.
ரஜினியின் இந்த குரல் பதிவு தற்போது சமூக வலைதளத்தில் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது. அதற்கு முக்கிய காரணமே, புனீத் மறைவிற்கு அறிக்கையை வெளியிட்டு இரங்கல் தெரிவிக்காமல், மகளின் செயலி மூலமாக ரஜினி தெரிவித்துள்ளது பலரின் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.
ரஜினியின் மகள் சௌந்தர்யா ஆரம்பித்த இந்த செயலியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாகிப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான குரல் பதிவுடன், டெல்லியில் இருந்தபடியே இந்த செயலியை அறிமுகம் செய்து வைத்தார். மருத்துவமணையில் இருந்து வீடு திரும்பிய போதும் தன் உடல் நலம் குறித்து இந்த செயலியில் தெரிவித்தார் ரஜினி.
அதே போல சமீபத்தில் வெளியான அண்ணாத்த படத்தை தன் குடும்பத்தாருடன் பார்த்த ரஜினி, படத்தை பார்த்துவிட்டு தன் பேரன்கள் என்ன சொன்னார்கள் என்பதையும் இந்த செயலில் குரல் வடிவாக தெரிவித்து இருந்தார். இப்படி தன் மகளின் செயலியை தொடர்ந்து விளம்பரம் செய்து வரும் ரஜினி, புனீத் ராஜ்குமாரின் இரங்கல் செய்தியை கூட தன் மகளின் செயலியில் குரல் வடிவாக வெளியிட்டுள்ளது பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது.
இதுகுறித்து பல விதமான கருத்துக்களை நெட்டிசன்கள் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒரு ட்விட்டர் வாசி ‘புனீத் மரணம் இரங்கல் செய்தி போல் இல்லை,உங்கள் மகளின் App விளம்பரம் போல் உள்ளது.’ என்று பதிவிட்டுள்ளார். இன்னொரு ட்விட்டர் வாசி ‘அடுத்தவன் சாவுல கூட பணம் பார்க்க சொல்லுதா உங்க ஆன்மீகம்’ என்று பதிவிட்டுள்ளார். இப்படி பலர் ரஜினியின் இந்த பதிவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.