கன்னித்தன்மை என்பது பெண்ணுக்கு மட்டுமா? ஆணுக்கு இல்லையா – நெட்டிசனை விளாசிய பாடகி சின்மயி

0
136
- Advertisement -

இந்திய பெண்களின் கன்னித்தன்மை தொடர்பான சர்ச்சை பதிவுக்கு சின்மயி கொடுத்திருக்கும் பதிலடிதான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் சின்மயி . இவர் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற ‘பாடல் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதனை தொடர்ந்து இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இவர் பாடகி மட்டும் இல்லாமல் டப்பிங் கலைஞரும் ஆவார். அதோடு இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி என பல மொழி படங்களில் பணியாற்றி இருக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க, சின்மயி எப்போதுமே சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார்.
இவர் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல் கொடுமைகள், அத்துமீறல், சமூக ப்ரச்சனை போன்ற பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

- Advertisement -

சின்மயி பற்றிய தகவல்:

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நெட்டிசன் ஒருவர், இந்திய ஆண்கள் திருமணம் செய்ய கன்னிப் பெண்கள் இல்லை என்று புலம்பி போட்ட பதிவிற்கு சின்மயி கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன் பதிவில், 1.2 லட்சம் காண்டம் பார்சல்கள் ஒரே இரவில் டெலிவரி செய்யப்படுகிறது. ஒரு இரவுக்கு அதுவும் பிளிங்கிட் தளத்தில் மட்டும் இவ்வளவு என்றால் மற்ற இ- காமெர்ஸ் தளங்கள், சந்தை விற்பனை என கணக்கில் கொண்டால் 10 மில்லியனுக்கும் மேல் இருக்கலாம்.

நெட்டிசன் விமர்சனம்:

இந்த தலைமுறையினர் கன்னிப் பெண்களை தேடிப் பிடித்து திருமணம் செய்வதற்கு வாழ்த்துக்கள் என்று கூறி இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சின்மயி, அப்படியானால் ஆண்கள் திருமணத்திற்கு முன்பு பெண்களிடம் பாலில் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது. ஆண்கள் ஆடுகள், நாய்கள், ஊர்வனவற்றுடன் தான் உடலுறவு கொள்ள வேண்டும் என்று போட்டிருந்தார்.

-விளம்பரம்-

சின்மயி பதிலடி:

இதற்கு இன்னொரு நெட்டிசன், பெண்களும் அதை செய்யக்கூடாது என்று கமெண்ட் போட்டு இருந்தார். உடனே சின்மயி, பெண்கள் கன்னித்தன்மை மீது ஆர்வம் கொண்டவர்கள் கிடையாது. ஆண்கள் பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக இருந்ததாக பெண்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அனைவரும் பாதுகாப்பான அல்லது பாதுகாப்பாற்ற உடலுறவு கொண்டீர்களா என்று கேட்க கூட உங்களுக்கு தைரியம் இல்லை. பாலியலில் விருப்பமில்லாத சகோதரர்கள் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டவுடன் நிரந்தரமாக அவர்களை மாசு படுத்தி விட்டதாக நினைக்கிறார்கள்.

கன்னித்தன்மை பற்றி சொன்னது:

இது ஆண்களுக்கு ஏதோ ஒரு வித நோய் இருப்பதை காட்டுகிறது என்று அவர்களுக்கு சப்போர்ட்டாக பேசியிருக்கிறார். இதை அடுத்து சின்மயின் இந்த பதிவிற்கு பலருமே ஆதரவாக கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதில் ஒரு நபர், ஏன் ஒவ்வொரு கணவன்மார்களும் தங்களுடைய மனைவியுடன் பாதுகாப்பான பாலியல் உறவு வைத்துக்கொள்ள காண்டம் வைத்து இருப்பார்கள் என்பதை கருதவில்லையா? என்று கூறியிருக்கிறார்

Advertisement