நடிகர் ஜான் விஜய் மீது எழுந்து இருக்கும் பாலியல் புகார் தொடர்பாக சின்மயி பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் சின்மயி . இவர் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடல் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர்.
அதனை தொடர்ந்து இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும், வைரமுத்துவுக்கும் இடையே பணிப்போரே ஏற்பட்டது. அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பி இருந்தது.
சின்மயி குறித்த தகவல்:
மேலும், இந்த Me Too விவகாரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள். இந்தப் பிரச்சனையில் இருந்து சின்மயி பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். இதை எடுத்து பிரபலங்கள் பல பேர் குறித்து சின்மயி புகார் அளித்திருக்கிறார். இந்த நிலையில் நடிகர் ஜான் விஜய் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, பெண் ஒருவர் நடிகர் ஜான் விஜய் மீது பாலியல் புகார் கொடுத்திருப்பதாக தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் சின்மயி பகிர்ந்திருக்கிறார்.
After The Newsminute report about the Sexual Assault case of Malayalam cinema also mentioned John Vijay for his misdemeanour with the journalist
— Chinmayi Sripaada (@Chinmayi) July 26, 2024
There are other women speaking about his behaviour in general. pic.twitter.com/AfeLgdC0lY
சின்மயி பதிவு:
அதில் அவர், நடிகர் ஜான் விஜய் அவர்கள் சென்னையில் உள்ள பிரபலமான கிளப்புகள் மற்றும் பப்புகளுக்கு வழக்கமாக சொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அங்கு அவர் பெண்களிடம் தவறான நோக்கத்தில் தான் அணுகுவார். அந்தப் பெண்கள் அவரிடம் முடியாது என்று சொன்னாலும் அதை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். காரணம், அவர் செலிபிரிட்டி என்பதால் அவரிடம் எஸ்(yes) சொல்ல வேண்டும் என்று தொடர்ந்து ஃபாலோ பண்ணி தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பார்.
ஜான் விஜய் மீது புகார்:
அவரிடம் பேச விருப்பம் இல்லை என்று சொன்னாலும் பல பெண்களுக்கு அவர் தொல்லை கொடுத்திருக்கிறார். இவரால் பல பெண்கள் மன அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். இதை பெண் ஒருவர் இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதை சோசியல் மீடியாவில் சின்மயி டேக் செய்து இருக்கிறார். தற்போது இந்த விவகாரம் தான் கோலிவுட் வட்டாரத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
ஜான் விஜய் குறித்த தகவல்:
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஜான் விஜய். இவர் பெரும்பாலும் படங்களில் வில்லன் வேடங்களில் தான் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.