பாலின சர்ச்சைக்கு உள்ளான வீராங்கனை, சிறு வயது புகைப்படத்தை பகிர்ந்து சின்மயி போட்ட பதிவு

0
391
- Advertisement -

பிரபல பாடகி சின்மயி, குத்துச்சண்டை வீராங்கனை இமானெ கெலிஃபிற்கு ஆதரவாக போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது 2024 பாரீஸ் ஒலிம்பிக்ஸில் பெண்களுக்கான 66 கிலோ எடை பிரிவு குத்துச்சண்டைப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற்றது. அதில் இத்தாலியைச் சேர்ந்த ஏஞ்சலா கரினி மற்றும் அல்ஜீரியாவை சேர்ந்த இமானெ கெலிஃப் இடையே போட்டி நடைபெற்றது.

-விளம்பரம்-

இப்போட்டி ஆரம்பித்த 46 ஆவது நொடியிலேயே இமானெ, ஏஞ்சலாவை தாக்கினார். இதனால் ஏஞ்சலா மூக்கில் இருந்து ரத்தம் வழிந்து இருக்கிறது. பின் தடுமாற்றத்துடன் இமானெவை எதிர்கொள்ள முடியாமல் திடீரென பாதி ஆட்டத்தில் போட்டியை நிறுத்தினார் ஏஞ்சலா. தனது எதிர் ஆட்டக்காரரான இமானெ நிஜமாகவே ஒரு பெண் இல்லை, அவர் ஒரு ஆண். ஆண் தன்மை கொண்ட வலிமைமிக்க இமானெவுடன் போட்டி போட முடியாது என்று நடுவரிடம் புகார் அளித்துவிட்டு ஆட்டத்திலிருந்து வெளியேறினார்.

- Advertisement -

சர்ச்சைக்கு காரணம்:

இதனால் நடுவர் இமானே கெலிஃப் வெற்றி பெற்றதாக அறிவித்து அவரின் கைகளை உயர்த்திப் பிடித்தார். இதைக் கண்ட ஏஞ்சலா களத்திலேயே விழுந்து அளத்தொடங்கி விட்டார். இந்தச் சம்பவம் தான் ஒலிம்பிக்ஸில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆண் தன்மை அதிகம் கொண்டவர்கள் பெண்களுக்கு இணையாக போட்டிகளில் களமிறங்க கூடாது என்றும் இதற்கு ஒலிம்பிக்ஸ் அமைப்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இமானெவுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சின்மயி பதிவு:

இந்நிலையில் பிரபல பாடகி சின்மயி, இமானெவின் சிறுவயது புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பதிவிட்டுள்ளார். அதில், இது இமானெ கெலிஃப் உடைய சிறு வயது புகைப்படம். ஆனால் ட்விட்டர் அவரை ஒரு ஆண் என்று சொல்கிறது. ஏனெனில் ஒரு குத்துச்சண்டை போட்டியில் இமானெவின் குத்துகளை தாங்க முடியாமல் இத்தாலியை சேர்ந்த எதிர்ப்பாளர் அப்படி கூறியுள்ளதால். இத்தாலியைச் சேர்ந்த ஒரு வெள்ளைப் பெண் சொன்னதால் இந்த உலகம் அதை நம்புகிறது.

-விளம்பரம்-

இமானெவுக்கு ஆதரவு:

மேலும் இது இமானெவின் தவறா. அவள் வெள்ளை கிடையாது. அவள் ஒரு முஸ்லிம். அவள் அல்ஜீரியாவை சேர்ந்த ஒரு பெண். ஒரு வெள்ளை போட்டியாளர் தோற்றுவிட்டால், எதிரில் விளையாடுபவர்கள் ஒரு ஆண் என்று இந்த உலகம் சொல்லுமா? என்று ஆதங்கத்துடன் சின்மயி பதிவிட்டுள்ளார். சின்மயின் இப்பதிவிற்கு தற்போது ஆதரவாகவும், எதிராகவும் இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர். தற்போது இவரின் பதிவு தான் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

சின்மயி குறித்து:

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திக்ழ்வர் சின்மயி. இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் படு ஆக்டிவாக இருப்பார். அதில் அவர் தன்னுடைய குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். மேலும், சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளை பற்றி எப்போதுமே சின்மயி பதிவிடுவார். அந்த வகையில் தற்போது இவர் பாரீஸ் ஒலிம்பிக்ஸ் சர்ச்சையை குறித்து பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement