வைரமுத்துவை சந்தித்த ராஜா ராணி அர்ச்சனா – புகைப்படத்திற்கு கீழ் எச்சரிக்கை செய்து சின்மயி போட்ட கமண்ட்.

0
304
archana
- Advertisement -

ராஜா ராணி 2 சீரியல் நடிகை அர்ச்சனா கவிப்பேரரசு வைரமுத்துவை சந்தித்திருப்பது குறித்து சின்மயி கொடுத்திருக்கும் கமெண்ட் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் டிவியில் விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று தான் ராஜா ராணி 2. கடந்த 2019 ஆம் ஆண்டு முடிவடைந்த ராஜா ராணி சீரியல் இளைஞர்கள் முதல் பல குடும்பங்கள் வரை என எல்லோர் மனதில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. அதனை தொடர்ந்து ராஜா ராணி 2 என்ற சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-
archana

இந்த சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது. தற்போது இந்த சீரியல் டிஆர்பியில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த தொடர் ஹிந்தி சீரியல் Diya Aur Baati Hum ரீமேக் ஆகும். தமிழில் இந்த சீரியலை இயக்குனர் பிரவீன் பெண்ணெட் இயக்கி வருகிறார். மேலும், இந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தின் மூலம் அர்ச்சனா மக்கள் மத்தியில் பிரபலமானார். சிறு வயது முதலே ஆங்கராக வேண்டும் என்று கனவுடன் இருந்தவர் அர்ச்சனா.

- Advertisement -

அர்ச்சனா குறித்த தகவல்:

பின் இவர் ஆதித்யா தொலைக்காட்சியின் மூலம் Vjவாக அறிமுகமானர். அதன் பின்பு இன்ஸ்டா மூலம் இவருக்கு விஜய் டிவி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதற்கு முன்பே விஜய் டிவியில் ஒளிப்பரப்பான நீயா நானா ஷோவிலும் பங்கேற்பாளர்களில் ஒருவராக அர்ச்சனா கலந்து கொண்டு இருக்கிறார். அதன் பின்னர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி இருக்கிறார். இருந்தாலும், இவருக்கு பேரும் புகழை ஏற்படுத்திக் கொடுத்தது ராஜா ராணி 2 சீரியல் தான்.

அர்ச்சனா பதிவிட்ட புகைப்படம்:

ஆனால், திடீரென்று இவர் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். இவர் விலகியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்த நிலையில் நடிகை அர்ச்சனா அவர்கள் கவிப்பேரரசு வைரமுத்துவை சந்தித்திருக்கிறார். மேலும், இவர் வைரமுத்துவை சந்தித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்த புகைப்படத்தில் ஒன்றில் அர்ச்சனாவின் தலையில் கை வைத்து வைரமுத்து ஆசீர்வதிப்பது போல் இருக்கிறது.

-விளம்பரம்-

சின்மயி கமெண்ட்ஸ்:

இந்த புகைப்படத்திற்கு சிலர் பாசிட்டிவான கமென்ட்ஸ், சிலர் நெகட்டிவான கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த புகைப்படம் குறித்து பாடகி சின்மயி கமெண்ட் ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், ஆரம்பத்தில் இதுபோலத்தான் அனைத்தும் இருக்கும். தயவு செய்து அவரிடம் கவனமாக இருங்கள். அவரை சந்திக்கும்போது யாரையாவது துணைக்கு வைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் இருந்து சற்று தள்ளியே இருங்கள் என்று கமெண்ட் செய்திருக்கிறார். இவரின் இந்த கமெண்ட் தற்போது சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சின்மயி குறித்த தகவல்:

இதனால் இந்த கமெண்டை அர்ச்சனா டெலிட் செய்திருக்கிறார். ஆனால், ஒரு சிலர் அர்ச்சனா டெலிட் செய்த கமெண்டை ஸ்கிரீன் ஷாட் எடுத்து சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கி வருகின்றனர். தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் சின்மயி . இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே ஒரு பணிப்போரே நடந்து கொண்டு இருக்கிறது. வைரமுத்து குறித்து இவர் கமெண்ட் செய்து கொண்டு தான் இருக்கிறார்.

Advertisement