‘விரைவில் உருவாகிறது சின்ன கவுண்டர் 2’ ஹீரோ யார் தெரியுமா ? (கேப்டன் தான் சரியா இருப்பார்)

0
1696
chinnagounder
- Advertisement -

சின்ன கவுண்டர் இரண்டாம் பாகத்தில் நடிக்க போகும் நடிகர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனர் ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சின்ன கவுண்டர். இந்த படத்தில் விஜயகாந்த், சுகன்யா, கவுண்டமணி, மனோரமா, வடிவேல் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். கிராமத்து கதையம்சம் கொண்ட படம் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், இந்த படம் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய அளவில் வெற்றி தந்திருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை தெலுங்கிலும், கன்னடத்திலும் கூட வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் சின்ன கவுண்டர் படத்தில் முதன் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் நடிக்க இருந்தார். ஆனால், அப்போது ரஜினி கால்ஷீட் கிடைக்காததால் படத்தில் விஜயகாந்த் நடித்தார். விஜயகாந்த் நடித்தும் இந்த படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் ஆகி இருந்தது. சின்ன கவுண்டர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக விஜயகாந்த் இருந்தார் என்று சொல்லலாம். படத்தில் ஊர் தலைவராக நியாயத்தை மட்டுமே தீர்ப்பாக சொல்லும் கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்து இருப்பார். விஜயகாந்தின் திரைப்பயணத்தில் இந்த படம் ஒரு திருப்பு முனையாக அமைந்திருந்தது.

- Advertisement -

சின்ன கவுண்டர் 2 படம் பற்றிய தகவல்:

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சின்னக்கவுண்டர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இயக்குனர் உதயகுமார் ஆர்வமாக இருக்கிறார். இது குறித்து பல மேடைகளில் இவர் பேசி இருக்கிறார். பல வருடங்களாகவே சின்ன கவுண்டர் இரண்டாம் பாகத்தின் கதை எழுதி அதற்கான நடிகர்களையும் தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில் இது குறித்து முதலில் விஜய் சேதுபதியிடம் இயக்குனர் கேட்டார். ஆனால், விஜய் சேதுபதி கால்ஷீட் காரணமாக மறுத்து விட்டார்.

சின்ன கவுண்டர் 2 படத்தில் நடிக்கும் நடிகர்:

இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. சின்னக்கவுண்டர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் ஓகே சொல்லி விட்டார். இன்னும் ஒரு சில மாதங்களில் சின்னக்கவுண்டர் படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. முதல் பாகம் வெளியானபோது பெற்ற வரவேற்பை போல் இந்த படத்திற்கும் வரவேற்பு கிடைக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

-விளம்பரம்-

ஆர்கே சுரேஷ் திரை பயணம்:

அதுமட்டும் இல்லாமல் இதற்கான நடிகை மற்றும் படத்தின் பிற விவரங்கள் குறித்த தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் ஆர்.கே.சுரேஷ். இவர் 2012ஆம் ஆண்டு வந்த சாட்டை திரைப்படத்தின் மூலம் திரைப்பட விநியோகஸ்தராக சினிமா துறைக்குள் நுழைந்தார். பின்னர் 2014ஆம் ஆண்டு சலீம் திரைப் படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார். இப்படி தொடர்ந்து பல்வேறு படங்களை தயாரித்து இருந்தார். பின் 2016ஆம் ஆண்டு பாலாவின் தாரை தப்பட்டை படத்தின் மூலம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார்.

ஆர்கே சுரேஷ் நடிக்கும் படங்கள்:

அதனைத் தொடர்ந்து பல படங்களில் ஆர்கே சுரேஷ் நடித்திருக்கிறார். பெரும்பாலும் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதோடு பில்லா பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம் திரைப்படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். தற்போது சின்னக்கவுண்டர் 2 படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் வெளிவர உள்ள சின்னக்கவுண்டர் 2 படத்திற்க்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

Advertisement