விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தாமஸ், பார்ட்டி வைப்பதாக சொல்லி ராஜாங்கத்தை அழைத்தார். ஆனால், ராஜாங்கம் திட்டிவிட்டு என்று சென்று விட்டார். தாமஸ் ஆட்கள்தான் என்னை கொலை செய்யப் பார்த்தார்கள். ஆனால், நான் அங்கிருந்து தப்பித்து வந்தேன். பின் தவறி ஒரு குழியில் விழுந்துவிட்டேன். அதற்கு பிறகு தான் சேது எனக்கு உதவி செய்தார் என்று நடந்தது எல்லாம் சொன்னார். அப்போதுதான் ராஜாங்கத்திற்கு நிம்மதியாக இருக்கிறது. அதற்குப்பின் இந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் எல்லாம் மாற்றி வைத்த டாக்டர்,அரசியல்வாதி எல்லாம் சேது அழைத்து வந்தார்.

நீதிமான், டாக்டர் இருவரும் சேர்ந்துதான் வேறொரு பிணத்தை சக்தி என்று மாற்றி ரிப்போர்ட் கொடுத்திருப்பது தெள்ளத் தெளிவாக தெரிந்து விட்டது. இதனால் நீதிபதி, பொய்யான வழக்கு போட்ட தாமஸ், அவருக்கு உடந்தையாக இருந்த நீதிமான், டாக்டர் மூவருக்குமே தண்டனை கொடுத்திருந்தார். பின் இந்த வழக்கில் இருக்கும் ராஜாங்கத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் ராஜாங்கத்தை விடுதலை செய்தார். சேது வீட்டில் எல்லோருமே ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். பின் இதைப் பற்றி கருப்பன், தமிழுக்கு போன் செய்து சொன்னார்.
சின்ன மருமகள்
தமிழும் ரொம்ப சந்தோஷப்பட்டார். கோர்ட்டில் வெளியே வந்த ராஜாங்கம், தன்னுடைய மகன் சேதுவை பார்த்து எமோஷனாக கட்டிப்பிடித்து அழுதார். வீட்டில் உள்ள எல்லோருமே ராஜாங்கத்திடம் நலன் விசாரித்தார்கள். அதற்குப் பின் சேது, தன்னுடைய அப்பாவை வீட்டிற்கு அழைத்து வந்து அவருக்கு தண்ணீர் ஊற்றி எல்லா பிரச்சினையும் முடிந்து விட்டது என்றார். மீண்டும் எமோஷனல் ஆன ராஜாங்கம் சேதுவை கட்டிப்பிடித்து அழுதார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அப்பத்தா, சேது-தமிழ்செல்வி இடம் நடந்து கொண்ட விதத்தையும் தமிழ்ச்செல்வி வீட்டை விட்டு வெளியே போன விஷயத்தை எல்லாம் சொல்லி அழுகிறார். ராஜாங்கத்திற்கு ஷாக்கிங் ஆக இருக்கிறது. ஈஸ்வரி, இதுதான் சந்தர்ப்பம் என்று மீண்டும் தமிழ்செல்வியை பற்றி மோசமாக பேசி ஏத்தி விடுகிறார். மலர், தமிழுக்காக பேசுகிறார். உடனே சேது, நான் செய்த தவறு தமிழை காதலித்து திருமணம் செய்து கொண்டது தான். இனிமேல் என் வாழ்க்கையில் அவள் கிடையாது. இது சத்தியம் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
ராஜாங்கம், சேது என்ன முடிவெடுத்தாலும் அதற்கு நான் சப்போர்ட் செய்வேன் என்று சொல்கிறார். அதற்கு பின் கருப்பன், அப்பாவை நீ வெளியே எடுக்க ரொம்பவே கஷ்டப்பட்டாய். இருந்தாலும் தமிழ் கொடுத்த துப்புவினால் தான் நம்மால் கண்டுபிடிக்க முடிந்தது. கொஞ்சம் யோசித்துப் பாரு மாப்பிள்ளை என்று சொல்கிறார். சேது, தமிழ்செல்வியின் மீது இன்னும் அதிகமாக கோபப்படுகிறார். இன்னொரு பக்கம் மாணிக்கம், உன்னுடைய மாமனார் வந்துவிட்டார் என்று சொல்கிறார். தமிழ்செல்வி, எனக்கு தெரியும். ஆனால் என்னுடைய படிப்பு தான் முக்கியம் என்று அங்கிருந்து கிளம்புகிறார்.






