விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, போஸ்- தமிழ் புகைப்படத்தை காண்பித்து அவர்களா என்று உறுதி செய்து கொள்கிறார். இன்னொரு பக்கம் கல்யாணம் நடக்குமா? நடக்காதா? என்ற பயத்தில் போஸ் தயாராகி இருந்தார். ஈஸ்வரியும் புலம்பி கொண்டு இருந்தார். அப்போது சாவித்ரி, தாமரை இருவரும் போஸை வெறுப்பேற்றினார்கள். சேது, போஸின் முகத்திரையை கிழிக்க அந்த சித்தரையும் அவருடைய மகளையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

இன்னொரு பக்கம் ஈஸ்வரி, என்ன நடக்குமோ? என்ன பிரச்சனை ஆகுமோ? என்ற பயத்திலேயே புலம்பி கொண்டிருந்தார். அப்போது பெண் வீட்டில் இருந்து எல்லோருமே தயாராகி வந்தார்கள். அதை பார்த்து ஈஸ்வரிக்கு சந்தோசமாக இருக்கிறது. தாமரை, சாவித்திரிக்கு ஒண்ணுமே புரியவில்லை, குழப்பத்தில் இருக்கிறார்கள். பின் காவியாவை ரூம்க்கு அழைத்து சென்ற ஈஸ்வரி, உனக்கு பெரிய மனசு. போஸை மன்னித்துவிடு. அவன் ஒழுங்காக இருப்பான் என்றெல்லாம் சொன்னார். உடனே சாவித்திரி- தாமரை இருவருமே ரூமிற்கு வந்து விட்டார்கள்.
சின்ன மருமகள்:
அப்போது போஸை பற்றி ஒன்றுக்கு இரண்டாக ஏற்றி விட்டார்கள். இதனால் சாவித்திரி, ஈஸ்வரி இருவரும் சண்டை போட்டுக் கொண்டார்கள். ஆனால், இதையெல்லாம் காவியா கேட்கவில்லை. அவர் காதில் ஹெட்செட் போட்டிருந்தார். பின் காவியா, கல்யாணத்தை எப்ப நிறுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் மகனுக்கு பாடம் புகட்டாமல் விடமாட்டேன் என்றார். இதை கேட்டு ஈஸ்வரி ஆடிப் போகிறாய். சித்ரா, எப்படியாவது அந்த ஒரு கோடி ரூபாய் பணத்தையாவது வாங்கணும். சேதுவை உண்மை சொல்ல விடக்கூடாது என்றெல்லாம் சொன்னார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி, போஸுக்கு சேர வேண்டிய செக்கை கொடுத்து விடுங்கள் என்று கேட்கிறார். ராஜாங்கம், அப்பத்தா எல்லோருமே கல்யாணம் முடியட்டும் தருகிறோம் என்று சொல்கிறார்கள். அதற்குப்பின் காவியா ரூமிற்கு ஈஸ்வரி செல்கிறார். அங்கு தாமரை, சாவித்ரி இருவருமே உட்கார்ந்து கொண்டு காவியாவிடம் ஒன்றுக்கு இரண்டாக போசை பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் கோபப்பட்டு ஈஸ்வரி, சாவித்திரி இடம் சண்டை போடுகிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் சாவித்ரி, தாமரை இருவரையும் ஈஸ்வரி வெளியே அனுப்பி விடுகிறார். அதற்கு பின் வந்த போஸ், காவியா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறி அழுகிறார். ஆனால், காவியா மனம் இறங்காமல் போசை திட்டி விடுகிறார். அதற்குப்பின் மாப்பிள்ளை, மணமகள் இருவரையும் மேடைக்கு அழைக்கிறார்கள்.
தனம்- தமிழ் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தனம், இந்த கல்யாணம் நடக்குமா? சேது மாமா உண்மையை கண்டுபிடிப்பாரா? என்று சொல்கிறார். அதற்கு தமிழ், கண்டிப்பாக சேது உண்மையை கண்டுபிடிப்பார் என்று சொல்கிறார். அதற்கு பின் அப்பத்தா, ஈஸ்வரியை அழைத்து ஒரு கோடி ரூபாய் பணத்தை மேடையில் எல்லோரும் முன்பும் தருகிறார்.






