விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் பெண்களின் நல வாழ்வுக்காக போராடும் லட்சுமி என்பவரை தமிழ் சந்தித்து பேசி இருந்தார். அப்போது லட்சுமி, இந்த வருடம் தேர்தலில் பெண்களுக்காக நீங்கள் நிற்க வேண்டும் என்றார். தமிழ், எனக்கு அந்த எண்ணம் இல்லை. நான் படிப்பில் தான் கவனம் செலுத்த போகிறேன் என்றார். இருந்தாலும் லக்ஷ்மி விடாமல் தேர்தலில் நிற்பதற்காக கேட்டுக் கொண்டிருந்தார். தமிழும் நான் யோசித்து முடிவு சொல்கிறேன் என்று கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் ஈஸ்வரிக்கு போன் செய்த எதிர்கட்சியாளர், தமிழ் காசு வாங்கி சேதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப் போகிறார் என்றார். இதை அறிந்தவுடன் ஈஸ்வரி சந்தோசப்பட்டார்.

சேதுவிற்கு போன் செய்த ஈஸ்வரி, எதிர்க்கட்சிக்கு பிரச்சாரம் செய்வதற்காக தமிழ் பணம் வாங்கி இருக்கிறார் என்று பொய்யான தகவலை சொல்லி விட்டார். இதனால் சேது பயங்கரமாக கோபப்பட்டார். ராஜாங்கம், சேது இருவரும் சேர்ந்து ஊர் முழுக்க பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அந்த இடத்திற்கு தமிழ் வந்தார். தமிழை பார்த்தவுடன் சேது வேண்டுமென்றே வம்பு இழுத்து பேசிக் கொண்டிருந்தார். இருந்தாலும் தமிழ் அதை கண்டுகொள்ளாமல் அங்கிருந்து கிளம்பினார்.
சின்ன மருமகள்:
அதற்குப்பின் தமிழை தனியாக சந்தித்து சேது, எதிர்க்கட்சியிடம் காசு வாங்கி பிரச்சாரம் செய்யும் அளவுக்கு உன் நிலைமை வந்து விட்டதா? இந்த கேவலமான வேலைக்கு பதில் என்னை எதிர்த்து தேர்தலில் நின்று வெற்றி பெற்று காண்பி என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார். தமிழ்செல்வி எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கிறார். அதற்குப்பின் தனம் தனியாக நடந்து வந்து கொண்டிருக்கும் போது ரவுடிகள் அவரிடம் வம்பு இழுத்தார்கள். இதை சேது, அந்த ரவுடிகளை அடித்து துவம்சம் செய்து தனத்தை காப்பாற்றினார்.

சீரியல் ட்ராக்:
தமிழ்ச்செல்வி படித்துக் கொண்டிருந்தார். அப்போது சேதுவிட்ட சவால் தான் அவருடைய கண் முன் வருகிறது. இதனால் தமிழ்ச்செல்வி, லட்சுமிக்கு போன் செய்து வீட்டிற்கு வர சொன்னார். லட்சுமியும் அவருடைய சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்களும் தமிழ்ச்செல்வியின் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது தமிழ்செல்வி, நான் தேர்தலில் நிற்கிறேன் என்றார். தமிழ்செல்வியின் அம்மாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது லட்சுமி நடந்ததையெல்லாம் சொன்னார். தமிழ்ச்செல்வி அம்மா, தேர்தலில் நிற்க வேண்டாம் என்றார். ஆனால், தமிழ் செல்வி கேட்கவில்லை. நான் கண்டிப்பாக சேதுவை எதிர்த்து நிற்பேன் என்றார்.
https://www.youtube.com/watch?v=_v-R0mvD-9Q
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் தேர்தல் பிரச்சாரத்தில் சேது-தமிழ் இருவரும் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். சேது, தமிழிடம் சவால் விடுகிறார். தமிழமே வெற்றி பெற்று காட்டுவேன் என்று சொல்கிறார். பின் தேர்தல் முடிவில் ஓட்டுகள் எண்ண படுகிறது. சேது-தமிழ் இருவரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.






