விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சாமியிடம் கேட்ட குறியில் உண்மை சொல்லக்கூடாது என்பதுதான் வந்தது. இதனால் இருவரும் வீட்டில் உண்மையை மறைத்தார்கள். அதற்குப்பின் ராஜாங்கம் வீட்டில் உள்ள எல்லோரையுமே அழைத்து தலைவர் சொன்னது போல எந்த பிரச்சனையிலும் வம்பிழும் மாட்டக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார். குறிப்பாக ஈஸ்வரி, சாவித்திரி இருவருக்கும் வார்னிங் கொடுத்தார். அதற்குப் பின் சேது, தமிழ் இருவரும் சந்தோஷமாக தங்களுடைய ரூமில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

தமிழ்- சேது வளைகாப்பு சிறப்பாக முடிந்ததால் ரொம்ப சந்தோஷமாக இருந்தார்கள். இன்னொரு பக்கம் ராஜாங்கம், தமிழை சேது வீட்டை விட்டு வெளியே துரத்துவது போல கனவு காண்டார். பின்னர் அதிர்ச்சியாகி எழுந்த ராஜாங்கம் ரொம்பவே அந்த கனவை நினைத்து பயப்பட்டார். ஆனால், ராஜாங்கம் வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. அதற்குப்பின் தமிழை பார்த்து பார்த்து எல்லோரும் கவனித்துக் கொண்டார்கள். இதை பார்த்து ராஜாங்கத்திற்கு சந்தோஷமாக இருந்தது.
சின்ன மருமகள்:
இன்னொரு பக்கம் காமேஷ் பிச்சையை சந்திப்பதற்காக சாவித்திரி- தாமரை இருவரும் கோவிலுக்கு சென்றார்கள். அங்கு காமேஷ் பிச்சை, தாமரையை காதலிப்பதாக ஒத்துக் கொண்டார். இதனால் சாவித்திரி ரொம்பவே சந்தோசப்பட்டார். அந்த சமயம் பார்த்து சாவித்திரிக்கு போன் செய்த ஈஸ்வரி, வீட்டிற்கு வர சொன்னார். வீட்டில் ராஜாங்கம் பார்த்த மாப்பிள்ளை வீட்டார் வந்திருந்தார்கள். சீக்கிரமாகவே கல்யாணத்தை வைத்து விடலாம் என்று பேசி இருந்தார்கள். சாவித்திரி- தாமரை இருவரும் கல்யாணத்தை தடுக்க நினைத்தார்கள். ஆனால், ராஜாங்கம் எல்லா முடிவும் எடுத்து விட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தாமரையால் தான் காதலிக்கும் விஷயத்தை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார். வீட்டில் எல்லோருமே தாமரை நிச்சயதார்த்தத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். கடைசியில் தாம்பூலத்தை மாற்றி விடுகிறார்கள். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வியின் தோழி ஜெனிக்கு அவசர அவசரமாக கல்யாணம் ஏற்பாடுகள் செய்கிறார்கள். ஜெனி கல்லூரிக்கு வராததால் தமிழுக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது ஜெனி காதலிக்கும் முருகன், தமிழ்ச்செல்விக்கு போன் செய்து விசாரிக்கிறார்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் காமேஸ் பிச்சையை சந்தித்த தாமரை, எங்கள் வீட்டில் எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. எப்படியாவது இந்த திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள் என்றெல்லாம் சொல்கிறார். காமேஷ், உங்கள் மாமா குறித்த அதே தேதியில் நான் தான் உனக்கு தாலி கட்டுவேன். யாராலும் அதை தடுக்க முடியாது என்று சொல்கிறார். இதையெல்லாம் சித்ரா வீடியோவாக எடுத்துக் கொள்கிறார். இன்னொரு பக்கம் கல்லூரிக்கு தமிழை பார்க்க சேது சென்றிருக்கிறார். அப்போது சேது, தமிழுக்கு சாப்பிட ஜூஸ் கொடுக்கிறார்.






