விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சாவித்திரி, அதற்கு நேரமில்லை. இங்கே திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார். இன்னொரு பக்கம் தாமரையை அழைத்து வரச் சொல்லி மணமேடையில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சேது, தமிழ்ச்செல்வி, கருப்பன் மூவருமே தாமரையின் ரூமுக்கு வெளியே நின்று அழைக்கிறார்கள். உள்ளே காமேஷ், தாமரை கழுத்தில் தாலியை கட்டி விட்டார். பின் அந்த இடத்திற்கு ராஜாங்கமும் வந்து தாமரையை அழைத்தார். என்ன செய்வது என்று புரியாமல் பயத்தில் சாவித்திரி -தாமரை இருவரும் இருந்தார்கள்.

ராஜாங்கம் காலில் விழுந்த சாவித்திரி, எங்களை மன்னித்து விடுங்கள். தெரியாமல் பண்ணிவிட்டோம். தயவு செய்து வாத்தியார் மாப்பிள்ளைக்கு என்னுடைய மகளை திருமணம் செய்து வைத்து விடுங்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்தார். பின் சாவித்ரி, மாப்பிள்ளை காலில் விழுந்து கெஞ்சி கதறுகிறார். தாமரையால் எதுவுமே பேச முடியவில்லை. உடைந்து போய் நிற்கிறார். அப்போது ராஜாங்கம், சாவித்திரி- தாமரை- அந்த பிச்சைக்காரனை தவிர எல்லோருமே வீட்டிற்கு கிளம்புங்கள். இனிமேல் அவங்களுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.
சின்ன மருமகள்:
அப்பத்தா, ராஜாங்கம் கொடுத்த நகை, புடவை எல்லாம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள். சாவித்திரி, எவ்வளவு சொல்லியுமே கேட்கவில்லை. மாப்பிள்ளை வீட்டிலும் கிளம்பி விட்டார்கள். பின் வீட்டில் இதுதான் சந்தர்ப்பம் என்று ஈஸ்வரி, ஒன்னுக்கு ரெண்டாக தாமரை- சாவித்திரி பற்றி ஏத்தி விட்டுக் கொண்டிருந்தார். எல்லோருமே ராஜாங்கத்திற்கு போன் செய்து திருமணத்தைப் பற்றி விசாரிப்பதால் அவர் பயங்கரமாக கோபப்பட்டார். இன்னொரு பக்கம் சாவித்திரி, கோபத்தில் போலீசுக்கு போன் செய்து காமேஷ் மீது புகார் கொடுத்தார். கோவிலுக்கு வந்த போலீஸ், காமேஷ் பிச்சையை பார்த்தவுடன் சகஜமாக பேசி இருந்தார்கள். இது எல்லாம் பார்த்து சாவித்திரிக்கு பயங்கர கோபம் வந்தது.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காமேஷ், என்னை திருமணம் செய்து கொள்ள அவர்கள் தான் வற்பூர்த்தினார்கள். திருமணத்திற்கு முன்பு கூட அவர்கள் என்னை கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் சொன்னார்கள் என்று தாமரை- காமேஷ் இருவரும் பேசிய வீடியோவை ஆதாரத்தாக காண்பித்தார். இதையெல்லாம் பார்த்து போலீஸ் எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்கள். தாமரை- சாவித்திரி இருவரும் என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி போய் நிற்கிறார்கள். இன்னொரு பக்கம் சேது வீட்டில்
கருப்பு, தனம், மலர் எல்லோருமே தாமரை- சாவித்திரி இருவரும் சேர்ந்து கோவிலில் பிச்சை எடுப்பது போலவும் சாப்பிடும்வது போல் நினைத்து பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
தமிழ் திட்டியுமே யாரும் கேட்கவில்லை. எல்லோரும் பயங்கரமாக சிரிக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஈஸ்வரி தான் நினைத்தது நடந்து விட்டது என்று தன் மகளுடன் சேர்ந்து ரொம்ப சந்தோஷப்படுகிறார். அதோட ஆட்டம் பாட்டம் என்று ஈஸ்வரி- சித்ரா இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சாவித்திரி- தாமரை இருவரும் எங்கு தூங்குவது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். காமேஷ், தான் தங்கும் இடத்தை காண்பிக்கிறார். அதை பார்த்து தாமரைக்கு பயங்கர கோபம் வருகிறது.






