விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ், பொது வெளியில் தன்னை அசிங்கப்படுத்தியதை சொல்லி ரொம்பவே வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் தாமரை- சாவித்திரி, சித்ரா-ஈஸ்வரி நான்கு பேருமே தமிழ்செல்வி முன்பு ராஜாங்கம் தங்களை அவமானப்படுத்தியது நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். அதோடு தமிழ்செல்வியை வீட்டை விட்டு அனுப்ப மீண்டும் சதி திட்டம் போட்டார்கள். கடைசியில் போஸ் செங்கல் சூலையில் வேலை செய்யும் பெண்ணை கரெக்ட் செய்து கொண்டிருந்தார்.

ராஜாங்கம் வீட்டிற்கு வந்த தரகர், தாமரைக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கும் விஷயமாக சாவித்ரியிடம் பேசி இருந்தார். சாவித்திரி, நிறைய வசதி உள்ள பணக்கார மாப்பிள்ளை மட்டும் காட்டுங்கள் என்றார். ராஜாங்கம், நீ சொல்வது ரொம்ப தவறு சாவித்திரி. நல்ல குணமுள்ள மாப்பிள்ளை தான் வேண்டும். தாமரைக்கு தேவையான எல்லா வசதிகளும் செய்து தருகிறேன் என்றார். இதைக் கேட்டு சாவித்திரி-தாமரை இருவரும் கொந்தளித்தார்கள். இன்னொரு பக்கம் சேது, தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார். தமிழ் மன்னிக்க முடியாது என்று சொல்லி விட்டார்
சின்ன மருமகள்:
இன்னொரு பக்கம் காவியா, தன்னுடைய அப்பா- அம்மா போஸை பற்றி சொன்னது எல்லாம் நினைத்து மனம் மாறினார். ஆனால், போஸ் இன்னும் திருந்தாமல் செங்கல் சூழலில் வேலை செய்யும் பெண்ணுடன் போனில் கடலை போட்டுக் கொண்டிருந்தார். அப்போது வந்த காவியா, இனிமேல் நீங்கள் கிச்சனில் தூங்க தேவை இல்லை. ரூமில் தூங்கிக் கொள்ளுங்கள் என்றார். அதைக் கேட்டு போஸ் எதுவும் சொல்லாமல் கோபப்பட்டார். இன்னொரு பக்கம் தாமரை, எனக்கு வசதியான நிறைய சொத்து இருக்கிற மாப்பிள்ளை தான் வேண்டும் என்று தன்னுடைய அம்மாவிடம் கண்டிஷன் போட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மலர், நீங்கள் விவாகரத்தை வாபஸ் வாங்கி விட்டால் தமிழ் இங்கிருந்து போக மாட்டாள். ரெண்டு பேரும் சேர்ந்து வாழலாம் என்று ஐடியா தருகிறார். இதை சேது, அப்பத்தாவிடம் சொல்லி சந்தோசப்படுகிறார். அப்பத்தா ரொம்பவே சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் போஸ்,
செங்கல் சூலையில் வேலை செய்யும் பெண் உடன் கடலை போட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், அந்தப் பெண் காவியா வைத்த ஆள் தான். அந்த பெண், போஸ் உடன் பேசும் வீடியோவை எல்லாம் காவியாவிற்கு அனுப்பி விடுகிறார். காவியா, அதை ஈஸ்வரிடம் காண்பித்து போஸின் முகத்திரையை கிழிக்கிறார்.

சீரியல் ட்ராக்:
ஈஸ்வரியால் எதுவுமே பேச முடியவில்லை. பின் காவியா, ஈஸ்வரி இருவரும் செங்கல் சூலைக்கு செல்கிறார்கள். அங்கு போஸ் செய்த வேலை எல்லாம் சொல்லி காவியா திட்டி அசிங்கப்படுத்துகிறார்.
கோபத்தில் ஈஸ்வரி, போசை அடி வெளுத்து வாங்குகிறார். இன்னொரு பக்கம் சேது, தன்னுடைய வக்கீலிடம் விவாகரத்து கேஸை வாபஸ் வாங்குவது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். வக்கீல், இது நல்ல முடிவு தான் என்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






