விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் போசை முருகருடைய மந்திரத்தை நூறு முறை சொல்ல வேண்டும் என்று காவியா சொன்னார். போஸ் மந்திரத்தை சொல்லும்போது பாதியிலேயே நிறுத்தினார். இதனால் காவியா, மீண்டும் முதலில் இருந்து மந்திரத்தை சொல்ல சொல்லி டார்ச்சர் செய்தார். அது மட்டும் இல்லாமல் போசை மந்திரம் முழுதாக சொல்ல விடாமல் குத்துப்பாடல்கள் எல்லாம் போட்டு விட்டு வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். இரு ஒரு பக்கம் ராஜாங்கம், தாமரைக்கு பார்த்த மாப்பிள்ளை பற்றி வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொல்லி திருமண ஏற்பாடுகளை செய்ய சொன்னார்.

ராஜாங்கம், தமிழ்ச்செல்வியின் வளைகாப்பு பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அப்பத்தா, தமிழ் செல்விக்காக ஏதாவது செய்யணும் என்றார். அதற்கு ராஜாங்கம், வீட்டு சாவிக்கொத்தை நிரந்தரமாக தமிழ்ச்செல்வி இடம் கொடுத்து விடலாம் என்றார். இதை கேட்டு சாவித்திரி, ஈஸ்வரி இருவரும் பயங்கரமாக கோபப்பட்டார்கள். இன்னொரு பக்கம் தாமரை, ராஜாங்கம் பார்த்த மாப்பிள்ளை பற்றி காமேஷ் பிச்சைக்கு போன் செய்து சொல்லி அழுதார். அதற்குப்பின் ஈஸ்வரி, வேண்டுமென்று தமிழை பற்றி மோசமாக பேசி வம்பு இழுத்தார்.
சின்ன மருமகள்:
தமிழும் ஈஸ்வரிக்கு பதிலடி கொடுத்துவிட்டு வந்தார். ஈஸ்வரி தமிழை பழிவாங்க வேண்டும் என்று
தனக்குத் தெரிந்த உறவினருக்கு போன் செய்து பேசி இருந்தார். அப்போது ஈஸ்வரி, தமிழின் வளைகாப்பிற்காக ராஜாங்கம் வைர வேலை முருகருக்கு கொடுப்பதற்காக போக இருந்தார்கள். நீ அந்த வேலை திருடி விடு. உனக்கு எல்லா உதவியும் நான் செய்கிறேன் என்றார். அந்த நபரும் சம்மதிக்கிறார். இன்னொரு பக்கம் தமிழ்செல்வி தூங்கிக் கொண்டிருக்கும் போது மீண்டும் சேது அவரை வீட்டை விட்டு வெளியே துரத்துவது போல கனவு கண்டு பயத்தில் தமிழ் எழுந்து கத்துகிறார். சேது அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வளைகாப்பு நடைபெறுவதற்கு முன்பு முருகனுக்கு வைர வேலை
கொடுப்பதற்காக தமிழ்- சேது இருவரும் கோவிலுக்கு கிளம்புகிறார்கள். இது தான் சந்தர்ப்பம் என்று ஈஸ்வரி
தன்னுடைய உறவுக்கார தம்பி இடம் தமிழ்- சேது கிளம்பும் விஷயத்தைப் பற்றி சொல்கிறார். அதற்கு பின் ராஜாங்கம், தாமரை கல்யாண விஷயமாக வீட்டில் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது வந்த தாமரை, எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை என்று சொல்கிறார். யாரையாவது காதலிக்கிறாயா என்று ராஜாங்கத்தின் மனைவி கேட்கிறார்.

சீரியல் ட்ராக்:
தாமரை உண்மை சொல்ல வரும்போது ஈஸ்வரி தடுத்து ஏதேதோ பேசி குழப்பி விடுகிறார். கோபத்தில் ராஜாங்கம், நான் பார்க்கும் மாப்பிள்ளை தான் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தீட்டிவிட்டு செல்கிறார். அதற்குப்பின் தாமரை, காமேஷிற்கு ஃபோன் செய்து நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லி வீட்டில் வந்து பெண் கேட்க சொல்கிறார். காமேஷ், என்னால் யாரிடமும் கைகட்டி பதில் சொல்ல முடியாது என்று திமிராக பேசிவிட்டு போனை வைத்து விடுகிறார். இன்னொரு பக்கம் தமிழ்-சேது சந்தோஷமாக பேசிக்கொண்டு வருகிறார்கள். அப்போது ரவுடிகள் சேதுவை சேதுவை தாக்குகிறார்கள். ஒரு கட்டத்தில் சேதுவை அந்த ரவுடிகள் மடக்கி பிடித்து விடுகிறார்கள்.






