விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த ராஜாங்கம், தன்னுடைய மகன் சேதுவை பார்த்து எமோஷனாக கட்டிப்பிடித்து அழுதார். வீட்டில் உள்ள எல்லோருமே ராஜாங்கத்திடம் நலன் விசாரித்தார்கள். அதற்குப் பின் சேது, தன்னுடைய அப்பாவை வீட்டிற்கு அழைத்து வந்து அவருக்கு தண்ணீர் ஊற்றி எல்லா பிரச்சினையும் முடிந்து விட்டது என்றார். மீண்டும் எமோஷனல் ஆன ராஜாங்கம் சேதுவை கட்டிப்பிடித்து அழுதார்.

அப்பத்தா, சேது-தமிழ்செல்வி இடம் நடந்து கொண்ட விதத்தையும் தமிழ்ச்செல்வி வீட்டை விட்டு வெளியே போன விஷயத்தை எல்லாம் சொல்லி அழுதார். ராஜாங்கத்திற்கு ஷாக்கிங் ஆக இருக்கிறது. ஈஸ்வரி, இதுதான் சந்தர்ப்பம் என்று மீண்டும் தமிழ்செல்வியை பற்றி மோசமாக பேசி ஏத்தி விட்டார். மலர், தமிழுக்காக பேசினார். உடனே சேது, நான் செய்த தவறு தமிழை காதலித்து திருமணம் செய்து கொண்டது தான். இனிமேல் என் வாழ்க்கையில் அவள் கிடையாது. இது சத்தியம் என்றார்.
சின்ன மருமகள்
ராஜாங்கம், சேது என்ன முடிவெடுத்தாலும் அதற்கு நான் சப்போர்ட் செய்வேன் என்றார். அதற்கு பின் கருப்பன், அப்பாவை நீ வெளியே எடுக்க ரொம்பவே கஷ்டப்பட்டாய். இருந்தாலும் தமிழ் கொடுத்த துப்புவினால் தான் நம்மால் கண்டுபிடிக்க முடிந்தது. கொஞ்சம் யோசித்துப் பாரு மாப்பிள்ளை என்று சொன்னார். சேது, தமிழ்செல்வியின் மீது இன்னும் அதிகமாக கோபப்பட்டார். இன்னொரு பக்கம் மாணிக்கம், உன்னுடைய மாமனார் வந்துவிட்டார் என்றார். தமிழ்செல்வி, எனக்கு தெரியும். ஆனால் என்னுடைய படிப்பு தான் முக்கியம் என்று அங்கிருந்து கிளம்பினார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கருப்பன், தமிழை பற்றி எவ்வளவோ எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், சேதுபதி கொஞ்சம் கூட இறங்கவில்லை. தமிழ் மீது கோபம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் செல்கிறது. அதற்குப்பின் கருப்பன், தமிழுக்கு போன் செய்து வீட்டில் நடந்ததை எல்லாம் சொல்கிறார். ஆனால், தமிழ்ச்செல்வி அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் தன்னுடைய கேரியரில் மட்டும் கவனம் செலுத்துகிறார். இன்னொரு பக்கம் ராஜாங்கம் உடம்பு முழுக்க அடிபட்டிருப்பதால் அவருடைய மனைவி ஒத்தடம் கொடுக்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதைப் பார்த்து சேது, மோகனா இருவருமே எமோஷனலாக அழுகிறார்கள். அதற்கு பின் கட்சியின் தலைவி சொன்னதால் ராஜாங்கத்தை சந்திக்க கட்சியின் உறுப்பினர்கள் தொண்டர்கள் எல்லோருமே வந்திருக்கிறார்கள். ராஜாங்கம், இனி நான் கட்சியில் சேரப் போவதில்லை. எனக்கு அமைச்சர் பதிவி வேண்டாம் என்று சொல்கிறார். சேது, கஷ்டமான காலத்தில் நீங்கள் தான் என் அப்பா பக்கம் இருந்திருக்க வேண்டும். ஆனால், நீங்களே கழுத்தை அறுத்து விட்டீர்கள் என்று சொல்லி கட்சியின் உறுப்பினர்களை வெளியே அனுப்புகிறார்.






