விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி, சூப்பராக இருக்கு கதை. நீதான் சொல்லிக் கொடுத்தாயா? சேது என்றெல்லாம் பேசி இருந்தார். உடனே ராஜாங்கம், நீ கொண்டுவந்த ஆதாரம் பத்தவில்லை. வேறு ஏதாவது இருந்தால் சொல்லு சேது. அப்பதான் இந்த பிரச்சனைக்கு முடிவு வரும் என்று சொன்னார். உடனே சேது, தன் கையில் இருந்த விஷ வண்டுவை காண்பித்தார். அதை பார்த்து எல்லோருமே பதறினார்கள். சாவித்திரி தாமரை அங்கிருந்து ஓடினார்கள். பின் சேது, அந்த வண்டை போஸ் மீது போட்டு விட்டார். அந்த வண்டு ஈஸ்வரியின் மீதும் பட்டு விட்டது.

வலி தாங்க முடியாமல் ஈஸ்வரி- போஸ் இருவரும் கத்தினார்கள். அப்போது ஈஸ்வரி, உண்மையை சொல் போஸ் என்றார். போஸ், நான் தான் மருந்து கொண்டு வந்தேன் என்று மீண்டும் மீண்டும் பொய் சொன்னார். வலி தாங்க முடியாமல் ஈஸ்வரி, சேது சொன்னது தான் உண்மை. போஸ் மருந்து கொண்டு வரவில்லை. தமிழ்செல்வி தான் கொண்டு வந்தார் என்று எல்லா உண்மையும் சொல்லிவிட்டார். வலி தாங்க முடியாமல் போஸ் உண்மையை ஒத்துக் கொண்டார். இதை கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆனார்கள்.
சின்ன மருமகள்:
போஸின் சுயரூபம் வெளியே வந்ததால் ஆத்திரம் தாங்க முடியாமல் ராஜாங்கம் அவரை அடிக்கிறார். அதற்குப்பின் போஸுக்கு கொடுக்க வேண்டிய ஒரு கோடி ரூபாய் பணத்தை
தமிழ்ச்செல்வி இடம் ராஜாங்கம் கொடுக்கிறார். தமிழ்ச்செல்வி, இந்த பணம் உங்களுடைய உயிருக்கு விலை கிடையாது. எனக்கு இந்த பணம் தேவையில்லை என்று சொல்கிறார். உடனே அப்பத்தா, தமிழ்ச்செல்விக்கு வேண்டாம் என்றாலும் அவருடைய பெயரில் இந்த பணத்தை போட்டு விடுவேன். தமிழ் செல்வி அந்த பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார். உடனே தாமரை, போஸ் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட விஷயத்தை எல்லோரிடமும் சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
எல்லோருக்குமே அதிர்ச்சியாக இருக்கிறது. பின் காவியாவுமே நடந்த விஷயத்தை எல்லாம் சொல்கிறார், கோபத்தில் கொந்தளித்த ராஜாங்கம், போஸை அடி வெளுத்து வாங்கினார். ஈஸ்வரி, காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுமே ராஜாங்கத்திற்கு ஆத்திரம் அடக்க முடியவில்லை. பின் வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். உடனே காவியா, இந்த கேவலமானவன் இங்கிருந்து போகக்கூடாது. இவனை இப்படியே விட்டால் எத்தனையோ பேரை ஏமாற்றுவான். என்னை ஏமாற்றியதற்கு தண்டனையாக இவனை நான் கல்யாணம் செய்து கொள்கிறேன். தினம் தினம் நான் சித்திரவதை செய்யணும் என்று சொல்கிறார். பின் போஸிற்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.
https://www.youtube.com/watch?v=OD989Pdspmk
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அப்பத்தா, உன்னுடைய அப்பாவின் உயிரை காப்பாற்றியது .தமிழ் தான் அவளை மன்னித்துவிடு என்றெல்லாம் பேசுகிறார். சேதுவும் மனம் மாறி தமிழை பார்ப்பதற்கு வீட்டிற்கு வருகிறார். பின் தமிழை கட்டிப்பிடித்து சேது மன்னிப்பு கேட்கிறார். ஆனால், அது சேது உடைய கனவு. பின் தமிழை பார்த்து எமோஷனலாக சேது நிற்கிறார்.






