விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம், எது நடந்தாலும் நாம் நேர்மையாகவும் மக்களுக்கு நல்லது செய்யணும், பார்த்துக்கொள்ளலாம் என்று சமாதானம் செய்தார். இதுதான் சந்தர்ப்பம் என்று ஐஸ்வர்யா, சேதுவின் மனதில் இடம் பிடிக்க அவருடன் சேர்ந்து பிரச்சாரம் செய்யப் போனார். ஐஸ்வர்யா பிரச்சாரம் செய்வதை பார்த்து தாமரையுமே பிரச்சாரம் செய்தார். இருவரும் எல்லோரின் காலில் விழுந்து ஓட்டு கேட்டார்கள். இதையெல்லாம் பார்த்து சேதுவிற்கு ஒன்றுமே புரியவில்லை. இன்னொரு பக்கம் தமிழின் அம்மா, இந்த தேர்தல் தேவையா? மாப்பிள்ளை வீட்டில் பிரச்சனை வரப்போகிறது என்றார். தமிழ்செல்வி, எது நடந்தாலும் பெண்களுக்காகவும் எனக்காகவும் போராட போகிறேன் என்றார்.

தேர்தலுக்காக தமிழ்செல்வி மும்முறமாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அதேபோல் சேதுவுமே தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக செய்து கொண்டிருந்தார். பின் சேது, என்னை எதிர்த்து நீ ஜெயிக்க முடியுமா? என்று சவால் விட்டார். தமிழ்செல்வி, எதுவாக இருந்தாலும் தேர்தல் முடிவில் தெரிந்து விடும். உங்களிடம் பேசி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார். அதற்குப்பின் ஒவ்வொரு வீடாக சென்று தமிழ்செல்வி ஓட்டுகளை சேகரித்தார். சேதுவுமே தன்னுடைய அப்பா செய்த பெருமைகளைப் பற்றி எல்லாம் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.
சின்ன மருமகள்:
தேர்தல் பற்றி ராஜாங்கம் வீட்டில் பேசிக் கொண்டிருந்தார்கள். தமிழ்செல்வியை பற்றி ரொம்பவே குறை சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதனால் ராஜாங்கம், நானே பிரச்சாரத்திற்கு வருகிறேன் என்றார். இன்னொரு பக்கம் தமிழ் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது தமிழை சந்தித்து ஈஸ்வரி- ஐஸ்வர்யா இருவரும் பேசி இருந்தார்கள். ஐஸ்வர்யா ரொம்பவே தரகுறைவாக தமிழை பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

சீரியல் ட்ராக்:
ஈஸ்வரியும் மோசமாக பேசுகிறார். ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா, தமிழை அடிக்கப் போனார். இதையெல்லாம் பார்த்த தமிழின் தோழி வீடியோ எடுத்து விட்டார். பின் இதைப்பற்றி சோசியல் மீடியாவில் பகிர்ந்து தமிழ் செல்விக்காக ஓட்டு கேட்டார்கள். இந்த வீடியோவை பார்த்த ராஜாங்கம், எதற்காக இப்படி செய்தீர்கள் என்று ஐஸ்வர்யாவை கேட்டார். அவர் ஏதேதோ சொல்லி சமாளிக்கப்பட்டார். இருந்தாலும் ராஜாங்கம் தேர்தல் நேரத்தில் இதெல்லாம் தேவையா? என்று திட்டி விட்டு சென்றார். சேது,தமிழுக்கு போன் செய்து கடுமையாக பேசி இருந்தார். மறுநாள் தேர்தல் நடக்கிறது. எல்லோருமே ஓட்டு போட்டார்கள்.
https://www.youtube.com/watch?v=bcINYMpI0Xs
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஈஸ்வரி, ராஜாங்கத்தை தமிழ்செல்வி விமர்சிப்பது போல போஸ்டர் அடித்து ஒட்ட சொல்கிறார். ஊர் முழுக்க தமிழ்ச்செல்வியின் போஸ்டர் இருக்கிறது. அதை பார்த்து ராஜாங்கம்-சேது எல்லோருமே கோபப்படுகிறார்கள். சேது, நான் உன்னை மன்னிக்கலாம் என்று இருந்தேன். ஆனால், இனிமேல் உன்னை மன்னிக்க மாட்டேன் என்று சொல்கிறார். தமிழ்செல்வி, என்னுடைய ஒரு முடி கூட உன்னிடம் மன்னிப்பு கேட்டு நிற்காது என்று சொல்கிறார். அதற்கு பின் ஈஸ்வரி, தமிழ்செல்வியை நீ தோற்கடிக்க வேண்டும் என்றால் நீ வேறு ஒரு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். சேது, வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்து நான் ஒரு முடிவெடுத்து விட்டேன் என்று சொல்கிறார்.






