விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம், சேது என்ன முடிவெடுத்தாலும் அதற்கு நான் சப்போர்ட் செய்வேன் என்றார். அதற்கு பின் கருப்பன், அப்பாவை நீ வெளியே எடுக்க ரொம்பவே கஷ்டப்பட்டாய். இருந்தாலும் தமிழ் கொடுத்த துப்புவினால் தான் நம்மால் கண்டுபிடிக்க முடிந்தது. கொஞ்சம் யோசித்துப் பாரு மாப்பிள்ளை என்று சொன்னார். சேது, தமிழ்செல்வியின் மீது இன்னும் அதிகமாக கோபப்பட்டார். இன்னொரு பக்கம் மாணிக்கம், உன்னுடைய மாமனார் வந்துவிட்டார் என்றார். தமிழ்செல்வி, எனக்கு தெரியும். ஆனால் என்னுடைய படிப்பு தான் முக்கியம் என்று அங்கிருந்து கிளம்பினார்.

கருப்பன், தமிழை பற்றி எவ்வளவோ எடுத்து சொல்லி புரிய வைத்தார். ஆனால், சேதுபதி கொஞ்சம் கூட இறங்கவில்லை. தமிழ் மீது கோபம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் செல்கிறது. அதற்குப்பின் கருப்பன், தமிழுக்கு போன் செய்து வீட்டில் நடந்ததை எல்லாம் சொன்னார். ஆனால், தமிழ்ச்செல்வி அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் தன்னுடைய கேரியரில் மட்டும் கவனம் செலுத்தினார். இன்னொரு பக்கம் ராஜாங்கம் உடம்பு முழுக்க அடிபட்டிருப்பதால் அவருடைய மனைவி ஒத்தடம் கொடுத்தார்.
சின்ன மருமகள்
அதைப் பார்த்து சேது, மோகனா இருவருமே எமோஷனலாக அழுதார்கள். அதற்கு பின் கட்சியின் தலைவி சொன்னதால் ராஜாங்கத்தை சந்திக்க கட்சியின் உறுப்பினர்கள் தொண்டர்கள் எல்லோருமே வந்திருந்தார்கள். ராஜாங்கம், இனி நான் கட்சியில் சேரப் போவதில்லை. எனக்கு அமைச்சர் பதிவி வேண்டாம் என்றார். சேது, கஷ்டமான காலத்தில் நீங்கள் தான் என் அப்பா பக்கம் இருந்திருக்க வேண்டும். ஆனால், நீங்களே கழுத்தை அறுத்து விட்டீர்கள் என்று சொல்லி கட்சியின் உறுப்பினர்களை வெளியே அனுப்பினார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சக்தி, ஜெனி இருவருமே தமிழின் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது ஜெனி, தமிழிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு நடந்ததை எல்லாம் சொல்கிறார். செல்லப்பாண்டி, சேதுவின் குடும்பத்திடம் நடந்ததை சொல்லி உண்மையை புரிய வைக்கலாம் என்று சொல்கிறார். உடனே தமிழ், யாருக்காகவும் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் என்னுடைய குழந்தை கேரியர் என்று இருக்கிறேன். தயவு செய்து என்னை அப்படியே விட்டுவிடுங்கள். இனிமேல் அந்த குடும்பத்தில் நான் சேர்ந்து வாழ்வது என்பது நடக்காத ஒன்று என்று சொல்கிறார்

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் ராஜாங்கம் தயாராகி சேதுவை அழைத்துக் கொண்டு போகிறார். வீட்டில் உள்ள யாருக்குமே ஒன்றுமே புரியவில்லை. ராஜாங்கம் மீண்டும் கட்சியில் சேருகிறாரா? என்ற சந்தேகம் வருகிறது. பின் ராஜாங்கம், சேதுவை சுயேட்சையாக தேர்தலில் நிற்க வைத்து போட்டியிடுவதாக சொல்கிறார். சேதுவிற்கு ஒன்றுமே புரியவில்லை. ராஜாங்கம், நான் உனக்காக துணையாக நிற்பேன். இனி எந்த கட்சியும் நமக்கு தேவையில்லை. நீ வெற்றி பெறுவாய் என்று சொல்லி வேட்பு மனு தாக்குதலில் கையெழுத்து போட சொல்கிறார். சேதுவுமே தன் அப்பாவிற்காக கையெழுத்து போடுகிறார்.






