விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி, என்ன நடக்குமோ? என்ன பிரச்சனை ஆகுமோ? என்ற பயத்திலேயே புலம்பி கொண்டிருந்தார். அப்போது பெண் வீட்டில் இருந்து எல்லோருமே தயாராகி வந்தார்கள். அதை பார்த்து ஈஸ்வரிக்கு சந்தோசமாக இருக்கிறது. தாமரை, சாவித்திரிக்கு ஒண்ணுமே புரியவில்லை, குழப்பத்தில் இருக்கிறார்கள். பின் காவியாவை ரூம்க்கு அழைத்து சென்ற ஈஸ்வரி, உனக்கு பெரிய மனசு. போஸை மன்னித்துவிடு. அவன் ஒழுங்காக இருப்பான் என்றெல்லாம் சொன்னார். உடனே சாவித்திரி- தாமரை இருவருமே ரூமிற்கு வந்து விட்டார்கள்.

அப்போது போஸை பற்றி ஒன்றுக்கு இரண்டாக ஏற்றி விட்டார்கள். இதனால் சாவித்திரி, ஈஸ்வரி இருவரும் சண்டை போட்டுக் கொண்டார்கள். ஆனால், இதையெல்லாம் காவியா கேட்கவில்லை. அவர் காதில் ஹெட்செட் போட்டிருந்தார். பின் காவியா, கல்யாணத்தை எப்ப நிறுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் மகனுக்கு பாடம் புகட்டாமல் விடமாட்டேன் என்றார். இதை கேட்டு ஈஸ்வரி ஆடிப் போகிறாய். சித்ரா, எப்படியாவது அந்த ஒரு கோடி ரூபாய் பணத்தையாவது வாங்கணும். சேதுவை உண்மை சொல்ல விடக்கூடாது என்றெல்லாம் சொன்னார்.
சின்ன மருமகள்:
ஈஸ்வரி, போஸுக்கு சேர வேண்டிய செக்கை கொடுத்து விடுங்கள் என்று கேட்டார். ராஜாங்கம், அப்பத்தா எல்லோருமே கல்யாணம் முடியட்டும் தருகிறோம் என்று சொன்னார்கள். அதற்குப்பின் காவியா ரூமிற்கு ஈஸ்வரி சென்றார். அங்கு தாமரை, சாவித்ரி இருவருமே உட்கார்ந்து கொண்டு காவியாவிடம் ஒன்றுக்கு இரண்டாக போசை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதனால் கோபப்பட்டு ஈஸ்வரி, சாவித்திரி இடம் சண்டை போட்டார். அதற்குப்பின் சாவித்ரி, தாமரை இருவரையும் ஈஸ்வரி வெளியே அனுப்பி விட்டார்.

சீரியல் ட்ராக்:
அதற்கு பின் வந்த போஸ், காவியா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறி அழுதார். ஆனால், காவியா மனம் இறங்காமல் போசை திட்டி விட்டார். அதற்குப்பின் மாப்பிள்ளை, மணமகள் இருவரையும் மேடைக்கு அழைத்தார்கள். தனம்- தமிழ் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தனம், இந்த கல்யாணம் நடக்குமா? சேது மாமா உண்மையை கண்டுபிடிப்பாரா? என்றார். அதற்கு தமிழ், கண்டிப்பாக சேது உண்மையை கண்டுபிடிப்பார் என்றார். அதற்கு பின் அப்பத்தா, ஈஸ்வரியை அழைத்து ஒரு கோடி ரூபாய் பணத்தை மேடையில் எல்லோரும் முன்பும் தந்தார்.
https://www.youtube.com/watch?v=Gstpzp_9auc
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் ராஜாங்கம், என்னுடைய உயிரை மட்டுமில்லாமல் எல்லோருடைய உயிரையும் காப்பாற்றிய போஸுக்கு ஒரு கோடி ரூபாய் பணத்தை தருகிறேன் என்று செக்கை நீட்டுகிறார். அந்த சமயம் வந்த சேது, செக்கை கொடுக்காதீர்கள். மருந்தை கொண்டு வந்தது போஸ் கிடையாது, தமிழ்செல்வி தான் என்று நடந்ததை சொல்கிறார். பின் ஆதாரமாக அவர் அழைத்து வந்த சித்தரும், அவரின் மகளும் உண்மையை சொல்கிறார்கள். அதை எல்லாம் ஈஸ்வரி, ராஜாங்கம் நம்பவில்லை. பின் கடைசியில் நிரூபிப்பதற்காக சேது, வண்டை எடுத்து போஸின் மீது விடுகிறார்.






