விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம், எது நடந்தாலும் நாம் நேர்மையாகவும் மக்களுக்கு நல்லது செய்யணும், பார்த்துக்கொள்ளலாம் என்று சமாதானம் செய்தார். இதுதான் சந்தர்ப்பம் என்று ஐஸ்வர்யா, சேதுவின் மனதில் இடம் பிடிக்க அவருடன் சேர்ந்து பிரச்சாரம் செய்யப் போனார். ஐஸ்வர்யா பிரச்சாரம் செய்வதை பார்த்து தாமரையுமே பிரச்சாரம் செய்தார். இருவரும் எல்லோரின் காலில் விழுந்து ஓட்டு கேட்டார்கள். இதையெல்லாம் பார்த்து சேதுவிற்கு ஒன்றுமே புரியவில்லை. இன்னொரு பக்கம் தமிழின் அம்மா, இந்த தேர்தல் தேவையா? மாப்பிள்ளை வீட்டில் பிரச்சனை வரப்போகிறது என்றார். தமிழ்செல்வி, எது நடந்தாலும் பெண்களுக்காகவும் எனக்காகவும் போராட போகிறேன் என்றார்.

தேர்தலுக்காக தமிழ்செல்வி மும்முறமாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அதேபோல் சேதுவுமே தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக செய்து கொண்டிருந்தார். பின் சேது, என்னை எதிர்த்து நீ ஜெயிக்க முடியுமா? என்று சவால் விட்டார். தமிழ்செல்வி, எதுவாக இருந்தாலும் தேர்தல் முடிவில் தெரிந்து விடும். உங்களிடம் பேசி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார். அதற்குப்பின் ஒவ்வொரு வீடாக சென்று தமிழ்செல்வி ஓட்டுகளை சேகரித்தார். சேதுவுமே தன்னுடைய அப்பா செய்த பெருமைகளைப் பற்றி எல்லாம் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.
சின்ன மருமகள்:
தேர்தல் பற்றி ராஜாங்கம் வீட்டில் பேசிக் கொண்டிருந்தார்கள். தமிழ்செல்வியை பற்றி ரொம்பவே குறை சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதனால் ராஜாங்கம், நானே பிரச்சாரத்திற்கு வருகிறேன் என்றார். இன்னொரு பக்கம் தமிழ் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது தமிழை சந்தித்து ஈஸ்வரி- ஐஸ்வர்யா இருவரும் பேசி இருந்தார்கள். ஐஸ்வர்யா ரொம்பவே தரகுறைவாக தமிழை பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

சீரியல் ட்ராக்:
ஈஸ்வரியும் மோசமாக பேசுகிறார். ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா, தமிழை அடிக்கப் போனார். இதையெல்லாம் பார்த்த தமிழின் தோழி வீடியோ எடுத்து விட்டார். பின் இதைப்பற்றி சோசியல் மீடியாவில் பகிர்ந்து தமிழ் செல்விக்காக ஓட்டு கேட்டார்கள். இந்த வீடியோவை பார்த்த ராஜாங்கம், எதற்காக இப்படி செய்தீர்கள் என்று ஐஸ்வர்யாவை கேட்டார். அவர் ஏதேதோ சொல்லி சமாளிக்கப்பட்டார். இருந்தாலும் ராஜாங்கம் தேர்தல் நேரத்தில் இதெல்லாம் தேவையா? என்று திட்டி விட்டு சென்றார். சேது,தமிழுக்கு போன் செய்து கடுமையாக பேசி இருந்தார். மறுநாள் தேர்தல் நடக்கிறது. எல்லோருமே ஓட்டு போட்டார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தேர்தலில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் சேது வெற்றி பெற்று விடுகிறார். இருந்தாலும் இறுதி கட்டம் வரை சேதுவை பதட்டத்துடன் வைத்து இருந்ததால் தமிழ்ச்செல்வியை எல்லோருமே பாராட்டுகிறார்கள். தமிழ்செல்வியின் முயற்சியும் பாராட்டி வாழ்த்துக்கள் சொல்கிறார்கள். பின் தமிழ் செல்வி, தான் துவங்கிய புதிய சாப்பாட்டு தள்ளுவண்டி கடையை லட்சுமி கையால் திறந்து வைக்க சொல்கிறாள். இன்னொரு பக்கம் சேது வெற்றி பெற்றதால் வீட்டில் உள்ள எல்லோருமே கொண்டாடுகிறார்கள். ராஜாங்கம் ரொம்ப பெருமையாக பேசுகிறார்.






