விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, தான் கண்ட கனவை தனத்திடம் சொல்லி சந்தோஷப்பட்டார். தனம், சீக்கிரத்திலேயே நீங்களும் அக்காவும் சேர்வது வாழ்வீர்கள் என்று சொன்னார். அதற்குப்பின் ராஜாங்கம், அப்பத்தா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அப்பத்தா, தமிழ்ச்செல்வியை மீண்டும் வீட்டிற்கு அழைப்பதை பற்றி பேசி இருந்தார். உடனே சேதுவை அழைத்த ராஜாங்கம், எனக்கு தமிழ்செல்வியை விவாகரத்து செய்யணுமா? என்பது கேள்வியாக இருக்கிறது. யோசித்து முடிவெடு என்றார். சேது, தமிழ்ச்செல்வியை ரொம்பவே காயப்படுத்தி விட்டேன்.

அந்த காயங்களுக்கு எல்லாம் மருந்து போட்டுவிட்டு என்னுடைய காதலை சொல்ல போகிறேன். தமிழ்செல்வியை நான் விவாகரத்து செய்ய மாட்டேன் என்றார். இதைக் கேட்டு ராஜாங்கம்- அப்பத்தா இருவரும் சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் தமிழ்செல்வி கல்லூரிக்கு கிளம்பும்போது கருப்பன், இனிமேல் நீங்கள் எங்கு போனாலும் காரில் தான் போக வேண்டும் என்று உத்தரவு போட்டு இருந்தார்கள். தயவு செய்து காரில் ஏறுங்கள் என்றார். தமிழும் எதுவும் சொல்லாமல் காரில் ஏறி சென்றார். இதை பார்த்து சேது சந்தோஷப்பட்டார்.
சின்ன மருமகள்:
இன்றைய எபிசோட்டில் சேது உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். அப்போது ஈஸ்வரியின் அண்ணன் மகள், சேது உடற்பயிற்சி செய்திருக்கும் அழகை ரசித்து போட்டோ எல்லாம் எடுத்துக் கொள்கிறார். இதை பார்த்து தனத்திற்கு பயங்கர கோபம் வருகிறது. பின் ஈஸ்வரியின் அண்ணன் மகளை திட்டி விட்டு செல்கிறார். அதற்குப்பின் கல்லூரியில் இருந்து தமிழ் செல்வி-சேது இருவருக்கும் விருது கொடுப்பது தொடர்பாக ராஜாங்கத்திடம் கேட்கிறார்கள். அதற்கு ராஜாங்கமும் ஏற்பாடு செய்ய சொல்கிறார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி வேலை செய்யும் ஹோட்டலுக்கு போன் செய்து தமிழ் செல்வி வேலையை விட்டு நிறுத்த சொல்லி ராஜாங்கம் சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
இதை அறிந்த தமிழ், எதற்காக என்னை வேலை விட்டு நீக்க சொன்னீர்கள்? என்று கேட்கிறார். அதற்கு ராஜாங்கம், நீ குழந்தையை வயிற்றில் வைத்துக் கொண்டு இப்படி கஷ்டமான வேலை செய்ய தேவை இல்லை. எனக்கு கணக்கு வழக்கு பார்க்க ஆள் தேவை. உனக்கு 20,000 சம்பளம் தருகிறேன். அந்த வேலையை நீ செய் என்று சொல்கிறார். அப்பத்தாவும் தமிழ்செல்வியை கட்டாயப்படுத்துகிறார். பின் ஒரு வழியாக தமிழ்செல்வி, ராஜாங்கம் சொன்ன வேலையை ஏற்றுக் கொள்கிறார். சேது ரொம்பவே சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் ஈஸ்வரியிடம் தமிழ்செல்வியை பற்றி அவர் அண்ணன் மகள் விசாரிக்கிறார். அவருமே நடந்த எல்லா விஷயத்தை பற்றி சொல்கிறார்.
https://www.youtube.com/watch?v=DRZ95aShAoA
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் தனம், தமிழ்ச்செல்வி இருவரும் சேர்ந்து தங்களுக்கு தெரிந்த ஒரு மொழியில் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், சேதுவிற்கு புரியவில்லை. உடனே சேதுவை வெறுப்பேற்றுவதற்காக தனம்- தமிழ் இருவரும் சேர்ந்து மாற்றி மாற்றி சேதுபதி பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பேசுவதை புரியாமல் குழம்பி போய் சேது உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.






