விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம், நீ குழந்தையை வயிற்றில் வைத்துக் கொண்டு இப்படி கஷ்டமான வேலை செய்ய தேவை இல்லை. எனக்கு கணக்கு வழக்கு பார்க்க ஆள் தேவை. உனக்கு 20,000 சம்பளம் தருகிறேன். அந்த வேலையை நீ செய் என்றார். அப்பத்தாவும் தமிழ்செல்வியை கட்டாயப்படுத்துகிறார். பின் ஒரு வழியாக தமிழ்செல்வி, ராஜாங்கம் சொன்ன வேலையை ஏற்றுக் கொண்டார். சேது ரொம்பவே சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் ஈஸ்வரியிடம் தமிழ்செல்வியை பற்றி அவர் அண்ணன் மகள் விசாரித்தார். அவருமே நடந்த எல்லா விஷயத்தை பற்றி சொன்னார்.

தனம் புரியாத மொழியில் திட்டியதால் புலம்பிக்கொண்டே ஈஸ்வரி இடம் என்ன அந்த வார்த்தைக்கு அர்த்தம் கேட்கிறார் ஐஸ்வர்யா. ஈஸ்வரிக்கு ஒன்றுமே புரியவில்லை. பின் ஐஸ்வர்யா, வீட்டிலுள்ள எல்லோரிடமே தனம் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்குப்பின் சேது, இதைப் பற்றி தனத்திடம் கேட்டார். தனம், உங்களுக்கு இந்த மொழி தெரியாதா? நாங்கள் ரகசியமாக பேசும் மொழி என்றார். பின் அந்த மொழி தெரியாததால் தனம், சேதுவை வெறுப்பேற்றுவதற்காக தமிழிடம் பேசுகிறார்.
சின்ன மருமகள்:
தமிழுமே பதிலுக்கு அந்த மொழியிலேயே பதில் கொடுத்தார். இவர்கள் இருவரும் புரியாத மொழியில் பேசுவதால் சேது குழம்பிப் போய் இருந்தார். இன்னொரு பக்கம் காவியா, போஸை கிச்சனில் தூங்க சொன்னார். உடனே ஈஸ்வரி, உன்னை கெஞ்சி கேட்கிறேன். எதுவாக இருந்தாலும் ரூமுக்குள் பேசிக் கொள்ளுங்கள் என்று சொன்னார். அதற்கு காவியா, இதுதான் அவனுக்கு கொடுக்கும் தண்டனை. யாரும் இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் காவியா, என்னுடைய விஷயத்தில் தலையிட்டால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உங்கள் மகன் தான் தண்டனை அனுபவிப்பான் என்று சொல்லி போசை திட்டி வெளியே அனுப்புகிறார். ஈஸ்வரியும் எதுவும் பேசாமல் அங்கிருந்து வந்து விடுகிறார். அதற்குப்பின் கல்லூரியில் விருது விழா நடப்பதால் ராஜாங்கம், சேது எல்லோருமே தயாராகி போகிறார்கள். பின் கல்லூரியில் கஷ்டப்பட்டு மக்களுக்காக மருந்து கொண்டு வந்ததற்காக சேதுவிற்கு விருது கொடுக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் எல்லா தேர்விலும் அதிக மதிப்பெண் எடுத்த தமிழ் செல்விக்கும் விருது கொடுக்கிறார்கள். அதோடு கல்லூரி கட்டண செலவையும் ராஜாங்கம் ஏற்றி கொள்கிறார் . அதற்குப் பின் ராஜாங்கம் சேது-தமிழ் இருவரையும் ரொம்ப பெருமையாக பேசி அவர்களுக்கு வாளை பரிசாக அளிக்கிறார்.அப்பத்தா ரொம்ப சந்தோசப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






