விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ், கல்லூரிக்கு எப்படி போவது என்று புலம்பி கொண்டு இருந்தார். பின் ராஜாங்கம், கட்சி தலைவரின் மனைவி எல்லோருமே சேது- தமிழ் இருக்கும் இடத்திற்கு வருந்தார். அப்போது தமிழை கல்லூரிக்கு அழைத்து செல்லும் விஷயமாக சேதுவிடம் பேசினார்கள். சேதுவால் எதுவும் சொல்ல முடியாமல் ஒத்துக் கொண்டார். இதைக் கேட்டு தமிழ் ரொம்பவே சந்தோஷப்பட்டார். தன்னை கல்லூரிக்கு அழைத்து செல்ல சேது ஒத்துக் கொண்டதால் தமிழ்ச்செல்வி ரொம்பவே சந்தோஷப்பட்டார்.

இன்னொரு பக்கம் வேலையை முடித்து வந்த ஆறுமுகத்திடம் போஸ் பேசி இருந்தார். பின் இருவரும் நன்றாக பேசிக் கொண்டிருக்கும்போதே சரக்கு அடிக்க போஸ் ஆறுமுகத்தை கூப்பிட்டார். ஆறுமுகம் வேண்டாம் என்று தடுத்துமே போஸ் கேட்கவில்லை. வழி இல்லாமல் ஆறுமுகம்- போஸ் குடித்தார்கள். தன் வழிக்கு ஆறுமுகத்தை கொண்டு வர வேண்டும் என்று போஸ் தேவையில்லாத வேலை எல்லாம் செய்தார். அதற்குப்பின் வீட்டில் கண்மணி ஆறுமுகத்துக்காக காத்துக் கொண்டிருந்தார்.
சின்ன மருமகள் சீரியல்:
அப்போது ஆறுமுகம் குடித்து வந்ததை அறிந்த கண்மணி ரொம்பவே கோபப்பட்டு திட்டினார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார். மழை வந்ததால் சேது உள்ளே தூங்கினார். லைட் எரிவதால் சேது ஆப் செய்து விட்டார். உடனே தமிழ்ச்செல்வி சத்தமாக கத்தி கத்தி படித்தார். மறுநாள் காலையில் தமிழ்ச்செல்வி தேர்வு எழுதப் போவதால் youtube சேனல் வந்து வீடியோ எடுத்தார்கள். அப்போது அப்பத்தா வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் தமிழ்ச்செல்வியை தேர்வுக்கு அழைத்து செல்வதற்காக எல்லோரும் தயாராக இருந்தார்கள். சேதுக்கு விருப்பமில்லை என்றாலும் தன் அப்பாவின் கட்சிக்காக தமிழ்செல்வியை தூக்கிக்கொண்டு தேர்வு எழுத சென்றார். பின் காரில் வரும் வழியில் தமிழ்ச்செல்விக்கு சாப்பாடு ஊட்டி விடுவது, அவளை கவனமாக கவனித்துக் கொள்வது என்றெல்லாம் சேது செய்தார். இதையெல்லாம் பார்த்து அப்பத்தா சந்தோசப்பட்டார். தமிழ்ச்செல்வி, சேதுவை பற்றி ரொம்ப பெருமையாக பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கல்லூரிக்கு சேது, தமிழ், ராஜாங்கம் எல்லோருமே வந்துவிடுகிறார்கள். அப்போது பேட்டியில் ராஜாங்கத்தை மாற்றி மாற்றி கேள்வி கேட்கிறார்கள். ராஜாங்கம், தமிழை பற்றி பெருமையாக பேசி வாழ்த்து சொல்லி அனுப்புகிறார். அதற்குப்பின் தேர்வு எழுதும் அறைக்கு தமிழை சேது அழைத்து செல்கிறார். அது மட்டும் இல்லாமல் தமிழ் பக்கத்திலேயே உட்கார்ந்து சேது கவனித்துக் கொள்கிறார். தமிழ்ச்செல்வி சொல்லும் எல்லா வேலைகளையும் சேது செய்து கொண்டிருக்கிறார். இதையெல்லாம் youtube சேனல் வீடியோ எடுத்துக் கொண்டே இருக்கிறது. இத்துடன் சீரியல் முடிகிறது






