விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, தமிழ் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சேது, நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். ஆனால், உன் முகத்தில் அது தெரியவில்லையே என்றார். அதற்கு தமிழ், என்னால் சீக்கிரமாக இந்த சந்தோஷத்தை எடுத்துக் கொள்ள முடியவில்லை. எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும். அதுக்கு முழுமையாக நான் என் மனதை தயார் படுத்தனும் என்றார். அதற்குப்பின் அப்பத்தா, மீண்டும் தமிழை திட்டி சேது வீட்டை விட்டு துரத்துவது போல கனவு காண்கிறார்.

சேது, தமிழை மீண்டும் வீட்டை விட்டு வெளியே துரத்தியது போல அப்பத்தா கனவு கண்டதால் ரொம்பவே கத்தினார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே அப்பத்தாவை சமாதானம் செய்து ஆறுதலும் சொன்னார்கள். இன்னொரு பக்கம் காமேஷ் பிச்சை நன்றாக நடித்ததை ஈஸ்வரி, சித்ரா இருவரும் பாராட்டினார்கள். பின் அப்பத்தா கவலையில் இருப்பதை பார்த்த சேது விசாரித்தார். அப்போது அப்பத்தா, கனவில் நடந்ததை சொல்லி வருத்தப்பட்டார். சேது, அப்படியெல்லாம் நடக்காது என்று தமிழ் தன்னிடம் அவகாசம் வாங்கிய விஷயத்தையும் சொன்னார். இதனால் அப்பத்தாவிற்கு கவலை இன்னும் அதிகமானது.
சின்ன மருமகள்:
அதற்குப்பின் தமிழ்ச்செல்வி அம்மா வசந்தி, அப்பத்தாவிற்கு போன் செய்து ஹாஸ்பிடலுக்கு போகும் விஷயத்தை சொன்னார். இதனால் அப்பத்தாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, தாமரையை தன் வலையில் சிக்க வைக்க காமேஷ் பிச்சையை பற்றி ஒரு பொய்யான கட்டுரையை பேப்பரில் வரவைத்தார். இதை பார்த்து தாமரை ரொம்ப சந்தோஷப்பட்டார். பின் சாவித்ரி, தாமரை இருவரும் அந்த கட்டுரையை படித்தார்கள். பின் தாமரை, காமேஷை எப்படியாவது கல்யாணம் செய்து கொள்ளணும் என்று சந்தோஷப்பட்டு அவருடன் கனவிலேயே டூயட் பாடினார். அதற்கு பின் ஹாஸ்பிடலுக்கு போகும் விஷயத்தை அப்பத்தா, தமிழ்ச்செல்வி சொன்னார். சேது, நானும் ஹாஸ்பிடலுக்கு வருகிறேன் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சாமியின் முன்பு அப்பத்தா வெள்ளத்தாய், சேது, தமிழ் இருவரும் சேர்ந்து வாழ முடிவெடுத்து விட்டார்கள். இனிமேல் இந்த குழந்தை விஷயத்தை மறைக்க முடியாது. உண்மையை சொல்லட்டுமா? என்று சாமியின் முன்பு பூ போட்டு பார்க்கிறார். ஆனால், அதில் சொல்ல வேண்டாம் என்று வருகிறது. அதற்குப்பின் தமிழ்ச்செல்வியின் ஸ்கேனிற்காக சேது, வெள்ளத்தாய் இருவரும் ஹாஸ்பிடலுக்கு போகிறார்கள். இன்னொரு பக்கம் டிவியில் காமேஷ் பிச்சையை பற்றி ஒரு நியூஸ் வருகிறது. அதை பார்த்து தாமரை வாயை பிளந்து கொண்டு பார்த்திருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
தன்னுடைய வலையில் தாமரை சிக்கியதால் ஈஸ்வரி ரொம்பவே சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம்
போஸ் மாலை போட்டு இருப்பதால் விரதம் இருக்கணும் என்று காவியா சொல்கிறார். போஸ் தன்னால் முடியாது என்கிறார். இருந்தாலும் காவியா கேட்கவில்லை. போஸை விரதம் இருக்க வைக்கிறார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் தமிழுக்கு ஸ்கேன் செய்கிறார்கள். அப்போது ஸ்கேனில் இரட்டை குழந்தை இருப்பதை சேது பார்த்து விடுகிறார். அதை சேது, அப்பத்தா வெள்ளத்தாய் இடம் சொல்ல வருகிறார். உடனே வெள்ளத்தாய், வாயை பொத்தி வெளியே அழைத்து சென்று நடந்த உண்மை எல்லாம் சேதுவிடம் சொல்கிறார். இதை கேட்டு சேது ரொம்ப சந்தோஷப்பட்டு தமிழை பார்க்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






