விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தாமரை, காமேஷ் பிச்சை இருவரும் போனில் நன்றாக பேசி இருந்தார். அப்போது தாமரையும் நிறைய பொய்களாக சொல்லி காமேஷிடம் பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் சேது, தமிழை மீண்டும் கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியே தள்ளுகிறார். தமிழ் எவ்வளவு சொல்லியும் சேது கேட்கவில்லை. கடைசியில் இது தமிழ் கண்ட கனவு. அதற்குப்பின் சேதுவை சந்தித்த தமிழ், இப்படியே என்னை பாசமாக பார்த்துக் கொள்வீர்களா? என்னை விட்டு போக மாட்டீர்கள் தானே, எனக்கு சத்தியம் செய்யுங்கள் என்றார். சேதுவும் சத்தியம் செய்து கொடுத்தார்.

ராஜாங்கம், தமிழ்ச்செல்விக்கு வளைகாப்பு செய்வதை பற்றி வீட்டில் உள்ள எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தார். அப்பத்தா, உன் மனதில் என்ன ஆசை இருக்கிறது என்றார். தமிழ், அப்படி எதுவும் பெரிதாக இல்லை. எங்களுடைய திருமண நாளில் இலவசமாக 10 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தது போல என்னுடைய வளைகாப்பிலும் கர்ப்பமாக இருக்கும் ஏழைப் பெண்களுக்கு வளைகாப்பு செய்து சீர் கொடுக்க வேண்டும் என்றார். இதைக்கேட்டு ராஜாங்கமும் சரி என்றார். இன்னொரு பக்கம் தாமரை, காமேஷிடம் போனில் கடலை போட்டுக் கொண்டிருந்தார்.
சின்ன மருமகள்:
அப்போது தாமரை எப்படியாவது காமேசை திருமணம் செய்ய வேண்டும் என்று சாவித்திரியிடம் சொன்னார். இன்னொரு பக்கம் போசை முருகருடைய மந்திரத்தை நூறு முறை சொல்ல வேண்டும் என்று காவியா சொன்னார். போஸ் மந்திரத்தை சொல்லும்போது பாதியிலேயே நிறுத்தினார். இதனால் காவியா, மீண்டும் முதலில் இருந்து மந்திரத்தை சொல்ல சொல்லி டார்ச்சர் செய்தார். அது மட்டும் இல்லாமல் போசை மந்திரம் முழுதாக சொல்ல விடாமல் குத்துப்பாடல்கள் எல்லாம் போட்டு விட்டு வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். இரு ஒரு பக்கம் ராஜாங்கம், தாமரைக்கு பார்த்த மாப்பிள்ளை பற்றி வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொல்லி திருமண ஏற்பாடுகளை செய்ய சொன்னார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜாங்கம், தமிழ்ச்செல்வியின் வளைகாப்பு பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அப்பத்தா, தமிழ் செல்விக்காக ஏதாவது செய்யணும் என்கிறார். அதற்கு ராஜாங்கம், வீட்டு சாவிக்கொத்தை நிரந்தரமாக தமிழ்ச்செல்வி இடம் கொடுத்து விடலாம் என்கிறார். இதை கேட்டு சாவித்திரி, ஈஸ்வரி இருவரும் பயங்கரமாக கோபப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் தாமரை, ராஜாங்கம் பார்த்த மாப்பிள்ளை பற்றி காமேஷ் பிச்சைக்கு போன் செய்து சொல்லி அழுகிறார். அதற்குப்பின் ஈஸ்வரி, வேண்டுமென்று தமிழை பற்றி மோசமாக பேசி வம்பு இழுக்கிறார்.

சீரியல் ட்ராக்:
தமிழும் ஈஸ்வரிக்கு பதிலடி கொடுத்துவிட்டு வருகிறார். ஈஸ்வரி தமிழை பழிவாங்க வேண்டும் என்று
தனக்குத் தெரிந்த உறவினருக்கு போன் செய்து பேசுகிறார். அப்போது ஈஸ்வரி, தமிழின் வளைகாப்பிற்காக ராஜாங்கம் வைர வேலை முருகருக்கு கொடுப்பதற்காக போக இருக்கிறார்கள். நீ அந்த வேலை திருடி விடு. உனக்கு எல்லா உதவியும் நான் செய்கிறேன் என்று சொல்கிறார். அந்த நபரும் சம்மதிக்கிறார். இன்னொரு பக்கம் தமிழ்செல்வி தூங்கிக் கொண்டிருக்கும் போது மீண்டும் சேது அவரை வீட்டை விட்டு வெளியே துரத்துவது போல கனவு காண்கிறார். பயத்தில் தமிழ் எழுந்து கத்துகிறார். சேது அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






