விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேதுவின் சித்தி, தமிழ்ச்செல்வி சொல்லாததை எல்லாம் சொன்னார். அதனால் சேது அத்தை, தமிழ்ச்செல்வியிடம் செக் கொடுத்து உனக்கு எவ்வளவு வேண்டுமோ பணத்தை எடுத்துக் கொண்டு விவாகரத்து கொடுத்துவிடு என்றார். உடனே தமிழ்ச்செல்வி, தன்னிடம் இருந்த சில்லறையை கொடுத்து நீங்கள் தொகையை எழுதிக் கொண்டு நான் கொடுத்த சில்லரையும் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். இதனால் சேது, தமிழ்ச்செல்வி மீது கோபப்பட்டார்.

செல்லப்பாண்டி செய்த வேலையால் ராஜாங்கம் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தார். அவர், தன்மீது தவறில்லை என்று எவ்வளவு சொல்லியுமே பத்திரிக்கையாளர்கள் மோசமான கேள்விகளை எல்லாம் கேட்டார்கள். இதனால் ராஜாங்கம், செல்லப்பாண்டியை திட்டிக் கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த சேது, கோர்ட்டில் விவாகரத்து கிடைக்கவில்லை. தமிழ்ச்செல்வி கொடுக்கவில்லை என்று நடந்ததை சொன்னார். இதனால் அப்பத்தா, சேதுவின் அம்மா எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள்.
சின்ன மருமகள் சீரியல்:
ராஜாங்கம் மட்டும் கோபத்தில் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். அப்போது சேதுவின் அத்தை, சித்தி இருவருமே இன்னும் கொஞ்சம் தமிழை பற்றி தவறாக பேசி ஏத்தி விட்டார்கள். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வியின் பாட்டி விவாகரத்தை பற்றி கேட்டார். அப்போது தமிழ்செல்வியின் அம்மா, கோர்ட்டில் நடந்ததை எல்லாம் சொன்னார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி தன்னுடைய மாமனார் வீட்டுக்கு போக தயாராகி இருந்தார். அவருடைய அம்மாவுமே வாழ்த்தி அனுப்பி இருந்தார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் தமிழ்ச்செல்வி கோர்ட் ஆர்டர் படி சேதுவின் வீட்டிற்கு தயாராகி கிளம்பினார். இன்னொரு பக்கம் வீட்டில் சேது, அவளுடன் சேர்ந்ததெல்லாம் வாழ முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து தமிழ்ச்செல்வி வீட்டிற்கு வந்தவுடன் சேதுவியின் மொத்த குடும்பமும் கொந்தளித்தது. குறிப்பாக சேதுவின் அத்தை ருத்ர தாண்டவம் ஆடினார். அதற்கு தமிழ்ச்செல்வி, கோர்ட் ஆர்டர் போட்டதால் நான் இங்கு வந்தேன் என்றார். அதற்கு சேது, நீ சொன்னால் நான் கேட்பதற்கு உன் வீட்டு நாய் இல்லை. நான் உன்னுடன் சேர்ந்து வாழ முடியாது என்றார்.

சீரியல் ட்ராக்:
உடனே அப்பத்தா, அவள் சட்டப்படிதான் வந்திருந்தார். எதற்காக இப்படி சொல்கிறீர்கள். நீ வீட்டிற்குள் வா தமிழ்செல்வி என்றார். அதற்கு தமிழ் செல்வி, நான் வீட்டுக்கு வர மாட்டேன். கெஸ்ட் ஹவுஸில் இருப்பேன் இருப்பேன் என்று சொன்னார். இதனால் அப்பத்தாவால் எதுவும் பேச முடியவில்லை. அதற்குப்பின் கெஸ்ட் ஹவுஸிற்கு சென்ற தமிழ் செல்வி பால் காய்ச்சி தன்னுடைய அக்காவிற்கு கொடுத்தார். அதற்குப்பின் போன் செய் வக்கீல் இடம் தமிழ்செல்வி, சேது நடந்து கொண்ட விதத்தைப் பற்றி சொன்னார். உடனே வக்கீல், இதற்கு நான் ஒரு முடிவு கட்டுகிறேன் என்றார்.
https://www.youtube.com/watch?v=BzocMOCGBA0
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் தமிழ்ச்செல்வியின் வக்கீல் ராஜாங்கம் வீட்டிற்கு வருகிறார். அப்போது வக்கீல், கோர்ட் சொன்னது படி செய்து தமிழ்ச்செல்வியுடன் சேது சேர்ந்து வாழவில்லை என்றால் நான் மீண்டும் உங்கள் மீது கேஸ் போடுவேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். அதற்குப் பின் ராஜாங்கம், கோர்ட் சொன்னபடி செய் வேறு வழியில்லை என்பதால் சேதுவும் தன்னோட துணிகளை எல்லாம் எடுத்துக்கொண்டு கெஸ்ட் ஹவுஸிற்கு வருகிறார். அப்போது சேது, நீ நினைத்தபடி நடந்தது என்று சந்தோசப்படாதே என்று சொல்கிறார்.






