விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் லட்சுமி உடன் சேர்ந்து தமிழ்ச்செல்வி தேர்தலில் நிற்பதற்கான மனு தாக்கல் செய்தார். பின் பேட்டியில் தமிழ்ச்செல்வி, பெண்களின் குரலாகவும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிமை வாங்கி தரவும் தான் இந்த தேர்தலில் நிற்கிறேன். கண்டிப்பாக எல்லா பெண்களின் ஆதரவும் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று பேசி இருந்தார். லட்சுமியும் பெண்களின் உரிமைக்காக நிறைய விஷயங்களை பேசி இருந்தார். இதையெல்லாம் செய்தியாக டிவியில் வருகிறது

இதை பார்த்த சாவித்திரி, சேது- ராஜாங்கத்திடம் காண்பித்தார். ராஜாங்கத்தினால் எதுவுமே பேச முடியவில்லை. சேது பயங்கரமாக கோபப்பட்டார். பின் தமிழ் இடம் தான் பந்தயம் வைத்த விஷயத்தை எல்லாம் சேது யோசித்து பார்த்தார். அதற்குப்பின் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்செல்வி மும்முரமாக ஈடுபடுகிறார். ஒவ்வொரு இடமாக சென்று வாக்குகளை சேகரித்தார். இன்னொரு பக்கம் சேதுவும் தேர்தல் பிரச்சாரத்திற்காக மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தார்.
சின்ன மருமகள்:
லட்சுமி, தமிழ்ச்செல்வி இருவரும் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். தமிழ்ச்செல்வி, தன்னுடைய வாழ்க்கையில் நடந்ததையும் பெண்கள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதையும் ரொம்பவே உணர்வுபூர்வமாக பேசிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் கேட்டு சேதுவிற்கு பயங்கர கோபம் வருகிறது. தமிழையும் அவருடைய குடும்பத்தையும் திட்டிக் கொண்டிருந்தார். பின் இதைப்பற்றி ராஜாங்கத்திடம் சொல்லி சேது புலம்பினார்.

சீரியல் ட்ராக்:
ராஜாங்கம், எது நடந்தாலும் நாம் நேர்மையாகவும் மக்களுக்கு நல்லது செய்யணும், பார்த்துக்கொள்ளலாம் என்று சமாதானம் செய்தார். இதுதான் சந்தர்ப்பம் என்று ஐஸ்வர்யா, சேதுவின் மனதில் இடம் பிடிக்க அவருடன் சேர்ந்து பிரச்சாரம் செய்யப் போனார். ஐஸ்வர்யா பிரச்சாரம் செய்வதை பார்த்து தாமரையுமே பிரச்சாரம் செய்தார். இருவரும் எல்லோரின் காலில் விழுந்து ஓட்டு கேட்டார்கள். இதையெல்லாம் பார்த்து சேதுவிற்கு ஒன்றுமே புரியவில்லை. இன்னொரு பக்கம் தமிழின் அம்மா, இந்த தேர்தல் தேவையா? மாப்பிள்ளை வீட்டில் பிரச்சனை வரப்போகிறது என்றார். தமிழ்செல்வி, எது நடந்தாலும் பெண்களுக்காகவும் எனக்காகவும் போராட போகிறேன் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தேர்தலுக்காக தமிழ்செல்வி மும்முறமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். அதேபோல் சேதுவுமே தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக செய்து கொண்டிருக்கிறார். பின் சேது, என்னை எதிர்த்து நீ ஜெயிக்க முடியுமா? என்று சவால் விடுகிறார். தமிழ்செல்வி, எதுவாக இருந்தாலும் தேர்தல் முடிவில் தெரிந்து விடும். உங்களிடம் பேசி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று சொல்லிவிட்டு அங்கிருந்து செல்கிறார். அதற்குப்பின் ஒவ்வொரு வீடாக சென்று தமிழ்செல்வி ஓட்டுகளை சேகரிக்கிறார். சேதுவுமே தன்னுடைய அப்பா செய்த பெருமைகளைப் பற்றி எல்லாம் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.






