விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வரிசையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த சின்னத்தம்பி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த தொடரில் பிரஜனுக்கு மனைவியாக நடித்திருந்தவர் நடிகை பவானி ரெட்டி.
இவர் கடந்த 2013ஆம் ஆண்டு இவருடன் ஒரு சீரியலில் நடித்த பிரதீப் என்ற நடிகருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் மகிழ்ச்சியாகி வாழ்ந்து வந்த இருவரது வாழ்க்கையிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இருவருக்கும் சண்டை ஏற்பட்டதால் 2017 மே மாதம் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் கணவர் பிரதீப்.
பவானி ரெட்டியுடன் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை காரணமாக அவரது கணவர் பிரதீப் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் நடிகை பவானி ரெட்டி தற்போது இரண்டாம் திருமணம் செய்துகொள்ள உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
பவானி ரெட்டி, ஆனந்த் என்பவரை தான் இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார். அவரும் சினிமா துறையில் தான் பணிபுரிந்து வருகிறாராம். இவர்களது திருமணம் விரைவில் நடைபெற இருப்பதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்குபெற்ற பவானியே தெரிவித்துள்ளார்.