சின்னத்தம்பி சீரியல் நடிகைக்கு இரண்டாம் திருமணம்.! அதுவும் காதல் திருமணமாம்.!

0
2132
Bhavani-reddy

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் சின்ன தம்பி. இந்த சீரியலில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்து வரும் பவானி தான் ஹீரோயின். இவர் இந்த சீரியலில் நடிக்கும் முன்னர் ரெட்டை வால் குருவி மற்றும் தவணை முறை வாழ்க்கை ஆகிய சீரியல் தொடர்களிலும் வஜ்ரம் என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.

முதல் கணவர் பிரதீப்:

- Advertisement -

இவர் கடந்த 2013ஆம் ஆண்டு இவருடன் ஒரு சீரியலில் நடித்த பிரதீப் என்ற நடிகருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் மகிழ்ச்சியாகி வாழ்ந்து வந்த இருவரது வாழ்க்கையிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இருவருக்கும் சண்டை ஏற்பட்டதால் 2017 ஆம் ஆண்டு மே மாதம் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் கணவர் பிரதீப்.

இதற்கு காரணம் எங்களுக்குள் உள்ள பிரச்சனை தான். ஆனால் இதற்காக தற்கொலை செய்துகொள்வார் என நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை எனக் கூறினார் பவானி. அதன் பின்னர் அவரது வாழ்க்கையே போனாதாக நினைத்திருந்த அவருக்கு சின்ன தம்பி சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகை பவானி ரெட்டி தற்போது இரண்டாம் திருமணம் செய்துகொள்ள உள்ளார். ஆனந்த் என்பவரை தான் இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார். அவரும் சினிமா துறையில் தான் பணிபுரிந்து வருகிறாராம். இவர்களது திருமணம் வரும் மார்ச் மாதம் நடக்க இருக்கிறது. மேலும், இவர்கள் காதலித்து திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement