சின்னத்தம்பி சீரியலுக்கு பின் பிரஜின் நடிக்கும் அடுத்த சீரியல். இந்த தேதியில் ஆரம்பம்.

0
1968
prajin
- Advertisement -

வெள்ளித்திரை நடிகர்களை விட சின்னத்திரை நடிகர்கள் சீக்கிரமாக மக்களின் மனதில் இடம் பிடிக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் மிக நீண்ட காலம் மக்கள் மனதில் இருப்பவர்களும் சின்னத்திரை நடிகர்கள் தான். சினிமா நடிர்களை விட சின்ன திரை நடிகர்களே இல்லத்தரசிகளின் அபிமானத்தை பெற்று வருகின்றனர். அந்த வகையில் மக்கள் மனதை சின்னத்தம்பி என்ற சீரியல் மூலம் கொள்ளையடித்தவர் நடிகர் ப்ரஜின். இவர் முதன் முதலில் சன் மியூசிக்கில் ஜாக்கியாக தான் அறிமுகமானார். பிறகு சினிமா துறையில் ஒரு கதாநாயகனாக வேண்டும் என்று ஆசையினால் நிறைய முயற்சிகள் செய்தார். டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் ப்ரஜின் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

- Advertisement -

பின் இவர் முதன் முதலாக “காதலிக்க நேரமில்லை” என்ற சீரியலில் நடித்து இருந்தார். இந்த சீரியல் மிகப் பெரிய அளவில் பிரபலமடைந்தது. இந்த சீரியல் மூலம் தான் நடிகர் ப்ரஜின் மக்கள் மனதில் பிரபலமானார் என்று சொல்லலாம். இதனை தொடர்ந்து இவருக்கு சினிமா படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், ப்ரஜின் அவர்கள் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். இவருக்கு பெரிய அளவில் சினிமாவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றவுடன் மீண்டும் சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார். சில வருடங்களுக்கு முன்னால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சின்னதம்பி” என்ற சீரியலில் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார்.

இதையும் பாருங்க : அட, நடிகர் விஷால் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளாரா? அதுவும் பாண்டியராஜன் படத்தில். புகைப்படம் இதோ.

ந்த சீரியலின் மூலம் இவர் வெகு விரைவாகவே குடும்பங்களில் ஒருவராக மாறி விட்டார். இந்த சீரியல் மூலம் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. தற்போது நடிகர் ப்ரஜின் அவர்கள் “அன்புடன் குஷி” என்ற புதிய தொடரில் நடிக்கிறார். இந்த தொடரும் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. மேலும், இந்த சீரியல் வருகிற ஜனவரி 27 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது என்று அறிவித்து உள்ளார்கள். இந்த சீரியல் மூலம் மக்கள் மனதில் மீண்டும் நடிகர் ப்ரஜின் இடம் பிடிப்பார் என்றும் கூறுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் அனைவரும் ப்ரஜினை சீரியலில் மீண்டும் காண்பதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றோம் என்று கூறி வருகிறார்கள்.

-விளம்பரம்-

அதோடு நடிகர் ப்ரஜின் அவர்களின் மனைவியும் சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்து துறையிலும் ஒரு கலக்கு கலக்கியவர். அவர் வேற யாரும் இல்லை நடிகை சாண்ட்ரா. பல தமிழ் சீரியல்கள் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சாண்ட்ரா. இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாக இருந்தார் நடிகை சான்ரா. அதோடு இவர்கள் இத்தனை காலமா குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என பல விமர்சனங்களை எழுப்பினார்கள். சில மாதங்களுக்கு முன்னர் தான் நடிகர் ப்ரஜின்–நடிகை சான்ட்ராவுக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்தது. இது அனைவருக்கும் தெரிந்ததே.

Advertisement